வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்தினால் விலை தானா குறையும் – சுப்ரீம் கோர்ட் கமெண்ட்!
“வெங்காயம் மற்றும் காய்கறி விலைகளை சுப்ரீம் கோர்ட்முறைப்படுத்த முடியாது. அது இந்த நீதிமன்றத்தின் பணியும் அல்ல. வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்துவதை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தினால் அதன் விலை தானாக குறையும்”என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெங்காயம் விலை கிலோ 100 ரூபாயைத் தொட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்தது. இதையடுத்து வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி ஒரே விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை
எடுக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இன்று இவ்வழக்கு நீதிபதிகள் பி.எஸ். சவுகான் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது “வெங்காயம் சாப்பிடுவதை 2 மாதங்களுக்கு நிறுத்தினாலே அதன் விலை தானாகவே குறைந்துவிடும்” என்று கூறிய நீதிபதிகள், வெங்காய விலையை முறைப் படுத்துவ தெல்லாம் சுப்ரீம் கோர்ட்டின் வேலை அல்ல என்றும், இதுபோன்ற
பொது நலன் வழக்குகளை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது என மனுதாரரை கண்டித்து அவர் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Don’t eat onions, Supreme Court tells petitioner
**********************************************************
The Supreme Court Friday declined to entertain a public interest litigation (PIL) seeking direction to the government to regulate the prices of Onions and other vegetables.


