32°C
விளம்பரம்
Advertisement

வீரப்பன் கூட்டளிகள் தூக்கு ரத்து:மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட் !

admin சேலம் Published: March 12, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஜனவரி 21ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Supreme-Court-Veerappan frinds
வீரப்பன் கூட்டாளிகளான சைமன், மாதையா, பிலவேந்திரன் மற்றும் ஞானபிரகாசம் ஆகியோரின் தூக்குத் தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற தவறிய மத்திய அரசின் அணுகுமுறையை கண்டித்த நீதிபதிகள் அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தனர்.

இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இன்று இவ்வழக்கு சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இத்தீர்ப்பின் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்