32°C
விளம்பரம்
Advertisement

கன்னாபின்னாவென பேசும் தலைவர்களின் கட்சி அங்கீகாரம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

admin சேலம் Published: March 12, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




முகம் சுளிக்கும் வகையில் கன்னாபின்னாவென தரக்குறைவாக பேசும் அரசியல் தலைவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சட்ட ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மேலும் அரசியல்வாதிகள் பொதுக்கூட்டங்களில் பேசுவதைத் தடுக்க நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு சட்ட ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
suprem court of india
ஜனநாயக நெறிமுறைகளை மீறும் வகையில் அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் பேசுவதாகவும் இதனை தடுக்க சுப்ரீம் கோர்ட் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அவதூறு பேச்சு பற்றி வரையறை செய்து விளக்கம் அளிக்குமாறு அரசு சட்ட குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் மத தலைவர்கள் பேசும் சர்ச்சைக்குரிய அவமதிப்பு பேச்சுக்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என இந்த பொதுநல மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வகையிலும், பிறரை அவமதித்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு சட்டங்களில் இடம் உள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனினும் இம்மாத துவக்கத்தில் மற்றொரு வழக்கில் வழங்கிய தீர்ப்பில் அரசியல்வாதிகள் நடத்தும் அவதூறு பிரச்சாரங்களை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது. 128 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 128 கோடி கருத்துக்கள் என அப்போதைய நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். பேச்சு உரிமையை ஜனநாயக உரிமையாக வர்ணித்த நீதிபதிகள், இந்த பேச்சுக்களை கேட்கும் மக்கள் தான் சரியான முடிவுக்கு வர வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார். இந்நிலையில் அவதூறாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது பற்றி தற்போது உச்சநீதிமன்றம் ஆலோசித்து வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்