விஷாலுடன் லட்சுமி மேனன் மீண்டும் இணையும் “நான் சிவப்பு மனிதன்”-மினி ஆல்பம்

விஷாலுடன் லட்சுமி மேனன் மீண்டும் இணையும் “நான் சிவப்பு மனிதன்”-மினி ஆல்பம்

யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, விஷால் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நான் சிவப்பு மனிதன்’. இதில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்ற படங்களில் வரும் கதாநாயகிகள் போல அல்லாமல், இதில் லட்சுமி மேனனுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ள வேடம் என்கிறார் இயக்குநர் திரு.

பஞ்சாப் சிங் வேடம் போட்டு, விஷாலுடன் லட்சுமி மேனன் நின்றுக்கொண்டிருக்கும் இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாக ஆரம்பித்துள்ளன. விஷாலுக்கு இணையான பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார். ஒரு மனிதனின் ஆசைகள் பற்றி கதைதான் இது. நம் நாயகன் என்ன ஆசைப்படுகிறான், அதை நோக்கிச் செல்ல என்னென்ன தடைகள் உள்ளன? எல்லாவற்றையும் உடைத்து எப்படி எதிர் கொண்டு அடைகிறான் என்பதைச் சொல்லும் விறுவிறுப்பான இந்த படம் விரைவில் வெளியாகும்” என்கிறார்.

Related Posts