போலீஸ் போக்கைக் கண்டித்து மக்களுடன் இணைந்து தர்ணா!டெல்லி முதல்வர் அறிவிப்பு!
“முதல்-மந்திரி என்ற முறையில் போலீசார் செய்யும் அராஜகத்தை அமைதியாக பார்த்து கொண்டு இருக்க என்னால் முடியாது. டெல்லி அமைதியாக இருப்பதற்காக போராடுவேன். 10 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். இதற்கு மத்திய அரசும், பிரதமரும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்திற்கு டெல்லி மக்கள் வர வேண்டும்.ந்மது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேவைப்பட்டால் டெல்லி அரசை வீதியில் இருந்தே நடத்துவோம்.”என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி காவல்துறையை கண்டித்து உள்துறை அமைச்சகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்த வந்த முதலமைச்சர் கெஜ்ரிவாலை தலைமைச் செயலக பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினருடன் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அதேபகுதியில் உள்ள ரயில் பவன் முன்பாக கட்சியினரிடையே பேசிய கெஜ்ரிவால் நடைப்பாதை வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுனர்களிடம் டெல்லி போலீசார் மாமூல் வாங்குவதாகவும், அந்த பணம் போலீஸ் கமிஷனர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு செல்வதாகவும் குற்றம் சாட்டினார். பெண்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு கோரியே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.
சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி எடுத்த விபச்சார தடுப்பு நடவடிக்கைகளை வெளிநாட்டவர் பாராட்டுவதாக அவர் கூறினார்.மேலும் அவ்ர்,”டெல்லி மக்களுக்காக போலீர் வேலை செய்ய வில்லை..டெல்லியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைபார்த்து கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.துணை நிலை கவர்னரை மதிக்கிறேன். ஆனால் அவரது விசாரணை சரியானதாக இல்லை. போலீசார் தங்கள் கடமையை உணர்ந்து செயல் பட வேண்டும். இல்லை என்றால் பதவியை ராஜி னாமா செய்து விட்டு எங்களுடன் சேர்ந்து நாட்டுக்காக போராடுங்கள்.
எனது ஆதரவாளர்களை வன்முறையில் ஈடுபட வேண் டாம், சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூறி உள்ளேன். முதல்-மந்திரி என்ற முறையில் போலீசார் செய்யும் அராஜகத்தை அமைதியாக பார்த்து கொண்டு இருக்க என்னால் முடியாது. டெல்லி அமைதியாக இருப்பதற்காக போராடுவேன். 10 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். இதற்கு மத்திய அரசும், பிரதமரும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்திற்கு டெல்லி மக்கள் வர வேண்டும். மக்களுடன் இணைந்து போராடுவேன். நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேவைப்பட்டால் டெல்லி அரசை வீதியில் இருந்தே நடத்துவோம் ..” என்று அவர் கூறினார்.
Kejriwal asks people to join 10-day stir, says Centre to blame for R-Day disruptions


