வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!?
பொது துறை வங்கி அதிகாரிகள் நிதியமைச்சகத்திடம் வங்கிகளுக்கு 5 வேலைநாட்கள் மட்டும் போதுமானது, இதனால் வங்கிகளுக்கு வாரம் 5 வேலை நாட்களாக குறைக்க சில முக்கிய பரிந்துறைகளுடன் மனுவை அளித்துள்ளது. வங்கியின் வார வேலை நாட்களை 5ஆக குறைப்பதால் பல வகையில் வங்கித் செலவுகளை குறைக்கலாம் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் விரைவில் முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே வாரத்தில் சனிக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடுத்தால் வங்கி செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படும், மக்களுக்கும் பெறும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்காவதாக இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்தது.அதற்கு வங்கிகளின் அதிரடியான பதிலாக,”
இப்போதெல்லாம் அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளும் 24×7 மணிநேரமும் செயல்படும் இணையச் சேவை மற்றும் மொபைல் வங்கிச் சேவை அளித்து வருகிறது,இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெரு மூலைக்கும் ஒரு ஏடிஎம் உள்ளது. இதனால் வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்படாது” என வங்கித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்தியாவின் சிறந்த பொதுத் துறை வங்கிகள் என போற்றப்படும் வங்கிகளும் இத்திட்டத்தை ஆதரிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் வங்கி செயல்பாட்டில் அதிகப்படியான பணத்தை சேமிக்கப்படும் என நிதியமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். ஏன் இந்த சலுகையை வங்கி அதிகாரிகள் அனுபவிக்க கூடாது என வர்த்தக பிரிவு அதிகாரிகள் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.1985ஆம் ஆண்டு மத்திய அரசு, நிர்வாகத்தில் திறனை அதிகரிக்க வாரத்தில் 5 வேலைநாள் திட்டத்தை அறிமுகபடுத்தியது குறிப்பிடத்தக்க்து.


