இந்த வாரம் ஒன்றை கற்போம் 10 -.நாடி என்றால் என்ன?

இந்த வாரம் ஒன்றை கற்போம் 10 -.நாடி என்றால் என்ன?

இந்த வாரம் ஒன்றை கற்போம் 10 -.நாடி என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?மனித உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும். இது மருத்துவம் – உடல் மாற்றம் மற்றும் பல விஷயங்களுக்கு நமது முன்னோர்கள் பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர். பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட இந்த நாடி டக்கென்றுடாக்டர் அல்லாத ஒரு சாதாரண பாட்டி கூட சொல்ல முடியும் அதிசயம். நாடி பெரும்பாலும் கைமணிக்கட்டில் பார்ப்பது தான் பெஸ்ட் – இதை பல்ஸ் ரீடிங் என கூறுவர். நாடி தலையில் இருந்து கீழ் நோக்கி வரும். இதை மூன்று கை விரல்களில் கண்டு கொள்ள முடியும்.கட்டை விரல் / மோதிர விரல் ஆள் காட்டி விரல் தான் அவை. வாதம் /கபம் / பித்தம் இந்த நாடி மூலம் மிக துள்ளியமாக கணிக்க முடியும். இதை எப்ப்டி கண்டுபிடிப்பது மற்றும் பல நாடிகளை பற்றி விலாவாரியாக கூறுகிறேன்.
ravi - apr 19
வாத நாடி – நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Index finger எனப்படும் ஆள்காட்டி விரலில் தெரியும் வாத நாடி.

பித்த நாடி – நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது நடு Middle Finger விரலில் தெரிவது வாத நாடி.

கப நாடி – நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது மோதிர விரலில் Ring Finger தெரிந்தால் அது கப நாடி.

ஆத்ம நாடி – .நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது சிறிய விரலில் பிடித்து பார்ப்பது ஆத்ம நாடி

பூத நாடி – நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Suzhumunai Imbalance என்னும் மூளை தடுமாற்றம் தான் பூத நாடி. இது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நடுவே தெரியும் அல்லது நெற்றியில் தெரியும் இது பாலச்சந்திரா அடங்கல் எனப்படும்.

குரு நாடி – என்றால் வாதம் / கபம் / பித்தம் / ஆத்ம மற்றூம் பூத நாடிகளின் கூட்டு கலவை தான் குரு நாடி.

பிரனான் நாடி – இது சாதாரணமாக யாருக்கும் பார்ப்பதில்லை. இது சில விபத்து அல்லது பேச்சு மூச்சு இல்லாமல் யாரவது இருப்பின் அவர்களின் பிராணம் செல்கிறதா என்று பார்ப்பது.

ஆங்கில மருத்தவம் – அல்லது ஸ்டெத்தஸ்கோப் சில வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாடியை நம் மூன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்தியம் செய்திருக்கின்றனர். வாதம் / கபம் / பித்தம் இந்த மூன்றை கன்ட்ரோல் பண்ணீனாலே போதும் – முக்கால்வாசி நோய்கள் மனிதனுக்கு வராது.

Let’s learn something – 13 What is NADI – How to identify them – How this technology was invented few thousand years by our forefathers –

error: Content is protected !!