ரெப்கோ வங்கியில் பணி!
பர்மாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அகதிகளாக வந்தவர்களுக்கு புதுவாழ்வு அளிக்கும் நோக்கத்திலேயே ரெப்கோ வங்கி நிறுவப்பட்டது. தற்போது யார் வேண்டுமானாலும் இந்த வங்கியின் உறுப்பினராக மாற முடியும் என்ற நிலை உள்ளது. இதன் நோக்கம் என்னவென்றால் அனைவரையும் அப்போதுதான் இந்த வங்கியின் சேவைகள் சென்றடையும் என்பதுதான். இந்திய அரசின் உள்துறை மைச்சகத்தின் நேரடி கட்டுப் பாட்டில் இந்த வங்கி இயங்குகிறது.

இந்நிலையில் அதிகாரிகள் (Probationary Officer), எழுத்தர்கள் (Junior Assistant/ Clerk) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரெப்கோ வங்கி விண்ணப்பங்களை வரவேற்கிறது.
காலிப்பணியிடங்கள்: 115, இதில் அதிகாரிகள் பணி-15 எழுத்தர்கள் பணி-100.
வயது: 01.11.2014 அன்று, புரோபேஷனரி ஆபீஸர் பணிக்கு 21-30, எழுத்தர் பணிக்கு 21-28 வயது இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வி: அதிகாரி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இளநிலை/முதுநிலைப் பட்டப் படிப்பில், எழுத்தர்பணிக்கு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: எஸ்.சி./எஸ்.டி. மாற்றுத்திறனாளி போன்றோர் அதிகாரி பணிக்கு ரூ. 400-ம் எழுத்தர் பணிக்கு ரூ. 300-ம் கட்டணம் செலுத்த வேண்டும். பிற பிரிவினர் அதிகாரி பணிக்கு ரூ.750-ம் எழுத்தர் பணிக்கு ரூ. 600-ம் கட்ட ணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்ட ணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல், கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையவர்கள் www.repcobank.com / www.repcobank.co.in ஆகிய இணையதளங்களில் ஆன்லைனில் 12.11.2014 முதல் 27.11.2014 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாள்கள்:
தொடக்க நாள்: 12.11.2014, கடைசி நாள்: 27.11.2014,
ஆன்லைன் தேர்வு நாள்: 08.01.2015 அல்லது 09.01.2015
கூடுதல் விவரங்களுக்கு:


