மே 23ஆம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்!
இந்திய ரிசர்வ் வங்கி நியமனம் செய்த ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் தலைவர் பி.ஜே.நாயக் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 23 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

பி.ஜே.நாயக் தலைமையிலான மத்திய ரிசர்வ் வங்கி செயற்குழு, மத்திய அரசிடம் கடந்த வாரம் அளித்த பரிந்துரைகளில் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் அரசு பங்குகளின் அளவை 50 சதவீதத்துக்கும் கீழாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பரிந்துரைகளுக்கு பல்வேறு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வருகின்ற 23ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏ.ஐ.பி.இ.ஏ., ஏ.ஐ.பி.ஒ.ஏ., பி.இ.எஃப்.ஐ., ஐ.என்.பி.இ.எஃப்., ஐ.என்.பி.ஒ.சி ஆகிய 5 சங்கங்களும் அறிவித்துள்ளன.


