மேகி நூடுல்ஸ் சேல்ஸ் இன்று முதல் தொடங்கியாச்!
நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் தயாரித்து விற்று வந்த மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அளவுக்கு அதிகமான ரசாயன கலப்பு இருப்பதாக கூறப்பட்டதால் கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவில் மேகி உணவுப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து வெளி நாடுகளில் உள்ள சோதனை கூடங்களில் மேகி நூடுல்ஸ் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மேகி உணவு பொருள் பாதுகாப்பானது என்று சான்றிதழ் அளிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு களிலும் மேகி பாதுகாப்பானது என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மேகி மீதான தடையை கடந்த மாதம் மும்பை ஐகோர்ட்டு விலக்கிக் கொண்டது.
மேகி உணவு பொருட்கள் 6 வகைகளில் வந்தன. அவற்றின் மாதிரி சுமார் 3500 தடவை சோதிக்கப்பட்டதாக தெரி விக்கப் பட்டது. இதையடுத்து மாநில அரசுகள் ஒவ்வொன்றாக மேகி மீதான தடையை திரும்பப் பெற்றன.மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் கர்நாடகா, பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களில் தயாரிக்கப் படுகின்றன. சமீபத்தில் அந்த 5 தொழிற்சாலைகளிலும் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு பணி தொடங்கியது.
இன்று முதல் மேகி நூடுல்ஸ் விற்பனை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. சிறிய கடைகளுக்கு மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுக்கள் வந்து சேர சில தினங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் எல்லா கடைகளிலும் மேகி நூடுல்ஸ் கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.


