வந்துட்டருய்யா.. ஒபாமாவும் பேஸ்புக்குக்கு வந்துட்டாரு!
* உலகம் முழுக்க அன்றாடம் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 150 கோடி. இதில் தினமும் 100 கோடி பேர் தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.: இந்நிலையில் பேஸ்புக்கில், அமெரிக்க அதிபர் ஒபாமா அஃபீஷியலாக இணைந்துள்ளார்.


பேஸ்புக்கில் ஏற்கனவே அதிபர் ஒபாமாவின் பெயரில் உள்ள கணக்கு Organising for Action என்ற அரசியல் அமைப்பு நடத்துவதாகவே இருந்த நிலையில், President Obama என்ற பெயரில் அதிபர் ஒபாமா சொந்தமாக பேஸ்புக் பக்கம் துவங்கியுள்ளார்.
நேற்று தொடங்கிய தனது முதல் பேஸ்புக் பதிவில், ஹலோ பேஸ்புக்! என்றும், நம் நாடு சந்திக்கும் மோசமான பிரச்சனைகள் குறித்து நாம் நேரடியாக விவாதிக்கலாம் என்று நம்புகிறேன். என்று கூறி ஒரு வீடியோவையும் அப்லோட் செய்துள்ளார். அதில் கால நிலை மாற்றத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.


