மன்மோகன்சிங் 3ம் தேதி பதவி விலக முடிவு?- பிரதமர் அலுவலகம் மறுப்பு!

மன்மோகன்சிங் 3ம் தேதி பதவி விலக முடிவு?- பிரதமர் அலுவலகம் மறுப்பு!

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், யார் பிரதமராக பதவி ஏற்பாரோ, அவரை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே முன்னிறுத்த வேண்டும் என்பது எனது கருத்து என்று கூறியிருந்தார். இந்நிலையில் வரும் 3ம தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மன்மோகன்சிங் தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று தகவல் பரவியது.ஆனால் இத்தகவலை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே சமயம் அன்றைய தினமே பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Rahul and Manmohan_31
பிரதமர் மன்மோகன்சிங் வரும் 3ம் தேதி ஊடகங்களை சந்தித்து பேசவிருக்கிறார். கடந்த 5 ஆண்டில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவிருக்கும் மன்மோகன்சிங் அன்றைய தினமே தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியானது. முன்னால் அவர் அளித்திருந்த பேட்டியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதையே தனது விருப்பமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் “நான் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பிரதமர் மன்மோகன்சிங் 3வது முறை பிரதமராக நீடிக்க விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் அவர் “சோனியாகாந்திக்கு பிறகு காங்கிரஸ் தலைமைக்கு பொருத்தமானவர் ராகுல் காந்தி தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் அலுவலகம் அவரது ராஜினாமா தகவலை மறுத்துள்ளது. அதே சமயம் அன்றைய தினமே பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Manmohan Singh to address media on January 3, PMO rules out he’s quitting
***************************************************************
Prime Minister Manmohan Singh will address the media on January 3, which will be his first formal press conference in nearly five years. The Prime Minister’s Office has dismissed speculation that Manmohan Singh will be stepping down ahead of the Lok Sabha elections scheduled to take place in the next three-four months.