மத்திய ரயில்வேயில் கான்ஸ்டபிளாக பெண்களுக்கு வாய்ப்பு! – ஜஸ்ட் 10ம் கிளாஸ் பாஸாகியிருந்தா போதும்

மத்திய ரயில்வேயில் கான்ஸ்டபிளாக பெண்களுக்கு வாய்ப்பு! – ஜஸ்ட் 10ம் கிளாஸ் பாஸாகியிருந்தா போதும்

செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2030 பெண் கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job feb 22
பணி: 

பெண் கான்ஸ்டபிள்.

மொத்த காலியிடங்கள்:

2030.

அ. ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force):

1827 இடங்கள் (எஸ்சி – 264, எஸ்டி – 145, ஒபிசி – 614, பொது – 804).

ஆ. ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை (Railway Special Protection Force):

203 இடங்கள் (எஸ்சி – 23, எஸ்டி – 33, ஒபிசி – 52, பொது – 95).

சம்பளம்:

ரூ.5,200 – 20,200.

வயது வரம்பு:

1.7.2016 தேதியின் படி 18 முதல் 25க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், விதவைகள், ரத்து பெற்ற பெண்கள் பொதுப் பிரிவினர் எனில் 2 வருடங்களும், ஒபிசியினர் எனில் 5 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினர் எனில் 7 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.

உடற் தகுதி:

உயரம் – குறைந்த பட்சம் 157 செ.மீ., எஸ்சி., எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 152 செ.மீ போதுமானது.

உடற் திறன் தகுதி:

1.800 மீட்டர் தூரத்தை 3 நிமிடம் 40 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். 12 அடி நீளம் தாண்ட வேண்டும் (இரு வாய்ப்புகள் வழங்கப்படும்). 3 அடி உயரம் தாண்ட வேண்டும் (இரு வாய்ப்புகள் வழங்கப்படும்).

ராணுவத் தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பெண்களுக்கு உடற் தகுதி திறன் நடத்தப்பட மாட்டாது. எழுத்துத் தேர்வு, உடற் தகுதி, உடற் திறன் தகுதி, சான்றிதழ் சரி பார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையில் பயிற்சி அளிக்கப்படும். இதில் வெற்றி பெற்றவர்கள் நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்படுவர். பயிற்சியின் போது மாதம் ரூ.5,200 மற்றும் இதர ஊக்கத் தொகைகள் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வில் மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும். 90 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். பொது அறிவு – 50 கேள்விகள், அரித்மெட்டிக் – 35 கேள்விகள், பொது நுண்ணறிவு மற்றும் ரீசனிங் – 35 கேள்விகள். தேர்வு 10ம் வகுப்பு தரத்தில் இருக்கும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மூன்று தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். கேள்வித் தாள் ஆங்கிலம், இந்தி மற்றும் சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கும். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழில் தேர்வு எழுதலாம்.

என்சிசி – ‘பி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு ஒரு மதிப்பெண், என்சிசி – ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்கள், பல்கலைக் கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு ஒரு மதிப்பெண், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு 2 மதிப்பெண், தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு – 3 மதிப்பெண்கள், 165 செ.மீ.க்கு மேல் உயரம் உள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்கள் என வழங்கப்படும்.

www.scr.indianrailways.gov.in அல்லது www.rpfonlinereg.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.3.2016.

Related Posts