மத்திய அரசின் உயர் அதிகாரிகள் 2,411 பேர்(தான்) லஞ்ச ஊழலில் ஈடுபடுறாங்களாம்!

மத்திய அரசின் உயர் அதிகாரிகள் 2,411 பேர்(தான்) லஞ்ச ஊழலில் ஈடுபடுறாங்களாம்!

ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகிறது. சமீபத்திய உலக அளவிலான ஆய்வு முடிவின்படி, 2015-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியா 76-ஆவது இடத்தில் உள்ளதாக (Corruption Perception index) தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 168 நாடுகள் அடங்கிய இந்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டைவிட, 9 இடங்கள் முன்னேறி, 2015}இல் இந்தியா 76-ஆவது இடத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நாட்டில் நிலவுகிற லஞ்ச ஊழல் நிலவரம் பற்றி பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு, சி.பி.ஐ. இயக்குனர் அனில் சின்காவை அழைத்து பேசியது.
rs apr 27
அப்போது அந்த குழுவிடம் அவர், “மத்திய அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் 2,411 பேர் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது 87 சதவீதம் அதிகம்” என தெரிவித்தார்.

இதில் சிறிய விவகாரங்களில் விசாரணை நடத்த 6 மாதங்களும், பெரிய விவகாரங்களில் 1 வருடம் வரையிலும் எடுத்துக்கொள்வதாக அவர் கூறினார்.சில வழக்குகளில் ஒரு வருடத்தைக் கடந்தும் விசாரணை நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் 29-ந் தேதி நிலவரப்படி, சி.பி.ஐ. விசாரணையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,200 ஆகும். இவற்றில் 31 வழக்குகள் மட்டும், 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கின்றனவாம்.இந்த தகவல்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்திய – ஸ்வீடன் வர்த்தகக் கூட்டமைப்பு இந்தியாவில் இயங்கும் 141 ஸ்வீடிஷ் நிறுவனங்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது. இந்தியாவில், வியாபாரம் செய்வதற்கேற்ற சூழ்நிலை சம்பந்தமான கேள்விகள் அந்த நிறுவனங்களிடம் கேட்கப்பட்டன. இந்தியாவில், சகப் போட்டியாளர்களைச் சமாளிக்க, லஞ்சம் கொடுக்கவேண்டியது அவசியமாகிறது. முதலீடுகளின் பெருக்கத்துக்கு, தடைக்கு, லஞ்சம் ஒரு பெரும் காரணியாக அமைகிறது என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஒவ்வோர் இந்திய குடிமகனையும், வெட்கித் தலைகுனியவைக்கும் இந்தத் தகவல்கள், அன்றாட வாழ்வில், நேரிடையாக அல்லது மறைமுகமாக அவர்களைப் பொருளாதார ரீதியாக தாக்கிக் கொண்டிருக்கிறது என்பதால், அதன் மீது அரசும், மக்கள் பிரதிநிதிகளும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. னால், பலவித தனிப்பட்ட விவகாரங்களுக்காக நாடாளுமன்றத்தை முடக்கும் அரசியல் கட்சிகள், அனைவரின் பொதுக் கவனத்துக்கும் வந்த, இம்மாதிரி தகவல்களின் அடிப்படையில், ஊழலில் இந்தியாவின் நிலை பற்றி விவாதித்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் கெளரவத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாதது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.