பேஸ்புக்கில் தொடந்து உலா வருபவரா நீங்கள்? அப்ப இந்த எச்சரிக்கையைப் படியுங்க!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களையும், சமூக வலைத்தளங்களையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.இதையடுத்து
இப்போதைய டாப் வலைத்தளமான பேஸ்புக்கில் பெரும்பாலான நேரத்தை போக்குவதாலேயே இவர்களின் தோற்றப் பொலிவு மங்கி இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக பிரச்னைகளை சந்திக்கின்றனர் எனறொரு ஆய்வு முடிவும் பேஸ்புக்கில் தங்களது சொந்த விஷயங்களை அதிகமாக பகிர்ந்துகொள்பவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்களே என்று இன்னொரு ஆய்வும் தெரிவிக்கின்றது.

தற்போது என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதிலிருந்து இன்று உடல்நிலை சரியில்லை, மனசு சரியில்லை என எல்லாவற்றையும் உடனுக்குடன் தெரிவித்து விடுகின்றனர். இதனால் நன்மைகள் இருக்குமளவுக்கு ஒருசில தீமைகளும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.அதே சமயம் பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் நமது தோற்றப் பொலிவுக்கும் தொடர்பு இருக்கிறதாம். எப்போதும் பேஸ்புக்கில் ஸ்க்ரோல் செய்தபடி இருப்பவர்கள் மனத்தில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றனவாம்.இதனிடையே ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றின விஷயங்களைப் அதிகமாக பகிர்ந்துகொள்வதற்கும், தனிமையில் வாடுவதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது கண்டறிய வேண்டும் என்று முற்பட்டனர்.இந்த ஆய்விற்காக, ஃபேஸ்புக்கின் பகிரங்கமாக தங்களது அக்கவுண்ட்டைப் பயன்படுத்தும் 600 பெண் பயனீட்டாளர்களின் பற்றிய விவரங்களை சேகரித்தார் அப்பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஏஸ்லாம் அல்-சக்கஃப்.இதே நிலை, ஆண்களுக்கும் பொருந்தும் என்று தெரிய வந்துள்ளது. “நாங்கள் 308 பயனீட்டாளர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்தோம். அவர்கள் அனைவருமே தாங்கள் தனிமையில் வாடுவதாகவும், சமூக வலைத்தளங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மூலம் தனிமையைப் போக்கிக்கொள்ள உதவுவதாகவும் கூறினர்” என்று ஏஸ்லாம் அல்-சக்கஃப். தெரிவித்தார்.
மேலும் சராசரி நபர்கள் தங்களது சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதை விட தனிமையில் இருப்பவர்கள் அதிக அளவில் பகிர்ந்துகொள்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அத்துடன் தொடர்ந்து பேஸ்புக்கில் உலவிக்கொண்டே இருப்பவர்கள் தங்களது தோற்றத்தை மற்றவர்களுடன் அதிகமாக ஒப்பிடுகிறார்களாம்.இது குறித்து நடந்த இன்னொரு ஆய்வை 881 பெண்களிடம் நடத்தியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களா, அவர்கள் உருவம் பற்றிய கேள்விகள் என்ற ரீதியில் இந்த ஆய்வை நடத்திமுடித்திருக்கிறார்கள்.அதில் எப்போதும் பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் பிறர் தங்களது போட்டோவை ஷேர் பண்ணுவதைப் பார்க்கும்போது அந்த உருவத்துடன் தங்களது உருவத்தை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறார்களாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு மெலிய வேண்டும் என நினைக்கும் பெண்கள் அதிகம் ஃபேஸ்புக்கில் நேரத்தைப் போக்குகிறார்களாம்.
மேலும், தனிமையில் இருப்பவர்களில் கிட்டதட்ட 98 சதவீதப் பேர் தங்களது உறவுகள் தொடர்பான நிலைத்தகவல்களைப் பகிரங்கமாக பகிர்ந்துகொள்கின்றனர். இதுபோன்ற செயல்கள், மற்றவர்கள் தங்களை தொடர்பு கொள்ளவேண்டும் என்றும், இதனால் தங்களின் தனிமை நிலையை போக்கிக்கொள்ள உதவுவதாகவும் தெரிகிறது.அத்துடன் சராசரி பயனீட்டாளர்களை விடவும் தனிமையில் இருப்பவர்கள் தங்களது முகவரிகளை அதிக அளவில் பகிர்ந்துகொள்கின்றன என்பதுடன் இதுபோன்ற விவரங்களைப் பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்வதில் ஆபத்துகள் உள்ளன என்பதை புரிந்துக் கொள்:ள வேண்டும்..


