பெற்றோர்களை பராமரிக்க மகன்கள் மறுப்பது கிரிமினல் குற்றம்1 – ஹைகோர்ட் தீர்ப்பு
நம் நாட்டில் மகன், மகளால் கைவிடப்பட்ட பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட முதியவர்கள் நலனை பேணவும், அவர்களது அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் உடல் நல பாதுகாப்பு வழங்க தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதையொட்டி மகன் மகளால் கைவிடப்பட்ட பெற்றோர் இச்சட்டத்தின் கீழ் உதவி பெற தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ.விடம் விண்ணப்பிக்க வேண்டும். மனுதாரரும் எதிர்தரப்பும் நேரில் விசாரிக்கப்படுவர். விசாரணையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை எனில் முதியோருக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை பெற்று வழங்கப்படும்.

தீர்ப்பாய நடவடிக்கைக்கு கட்டுப்படாதவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை 5,000 ரூபாய் அபராதம் வழங்க இச் சட்டம் வழிவகை செய்கிறது.இதுதொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் முதியோர் நலனில் அனுபவமிக்க இரு தன்னார்வ தெண்டு நிறுவனங்கள் இரு மூத்த தன்னார்வலர்கள், அரசு அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.மகன் அல்லது மகளால் கைவிடப்பட்ட பெற்றோர் பாதிக்கப்பட்ட முதியோர் தங்களுக்கு பாதுகாப்பு தேவை எனில் இச்சட்டத்தில் உதவி பெறலாம். ஆர்.டி.ஓ., அல்லது மாவட்ட சமூக நல அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்வேறு பொது இடங்களில் நோட்டீஸ் போர்ட் வைத்திருந்தாலும் பல குடும்பங்களில் பெற்றோர் புறக்கணிக்கப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் பெற்றோர்களை பராமரிக்க மகன்கள் மறுப்பது கிரிமினல் குற்றம் -சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தன் பிள்ளைகளிடம் ஜீவாதார வாழ்வுக்காக பொருளாதார உதவியை எதிர்ப்பார்ப்பது ஒவ்வொரு தாயாரின் சட்ட உரிமை மட்டுமல்ல, அரசியலமைப்பின் சார்பான, அடிப்படை உரிமையும், இயற் கையான நியாய உரிமை என்றும் வழக்கு ஒன்றின் தீர்ப்பின் போது மாண்புமிகு நீதியரசர் S.விமலா உத்தர விட்டுள்ளார். தர்ம சூத்திரத்தின் படியும், நடைமுறை சட்டத்தின் படியும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை பராமரிக்க மறுப்பது கிரிமினல் குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை ஹகோர்ட் மதுரை கிளையில் விசாரித்த அந்த வழக்கில் மூன்று மகன் களும் தங்கள் தாயாருக்கு மாதம் ரூ.21,000/- அளிக்க வேண்டும் எனவும் நீதியரசர் தீர்ப்பளித்துள்ளார்.


