“நான் ஏன் மறுபடியும் சினிமாவுலே நடிக்கேன்.. தெரியுமா?” – விஜயகாந்த விளக்கம்

“நான் ஏன் மறுபடியும் சினிமாவுலே நடிக்கேன்.. தெரியுமா?” – விஜயகாந்த விளக்கம்

தே மு தி க நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் தன் மகன் சண்முகபாண்டியனுடன் நடிப்பில் போட்டி போட்டு உருவாக்க இருக்கும் படம் ‘தமிழன் என்று சொல்’. ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க இருக்கும் இப்படத்தை வரதராஜன் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தோட பூஜை நேற்றைக்கு நடந்தது
cine nov 23
படப் பூஜையில் விஜயகாந்த் பேசும் போது “அரசியலுன்னு வந்தப் பின்னாடி படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமா இருந்தேன். அப்பதான் ‘தமிழன் என்று சொல்’ படத்தின் கதையைக் கேட்டுட்டு. என் மனைவியும், பெரிய பையனும் இப்படத்தில் என்னையும் நடிங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ’நானே மக்கள் பணி’ அது இதுன்று போய்க்கிட்டிருக்கிறேன்டா என்று சொன்ன பின்னடியும், “நீங்க நடிக்கிறீங்க” என்று பெரிய பையன் சொல்லி விட்டான்

உடனே தான் இயக்குநரை கூப்பிட்டு கதையைக் கேட்டேன். டைரக்டர் சொன்ன கதையில் ஒரு வெறி இருந்தது. அதுனாலேயும் நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டேன். இதுலே சண்முக பாண்டியன் நடிக்கிறான் என்பதைத் தாண்டி, மொழிப் படம் என்பதால் ஒப்புக் கொண்டேன்.

அப்பிடியும் டைரக்டரிடம் “ஏன்பா.. தமிழ்நாட்டில் வேறு நடிகர்களே இல்லயா” எனக் கேட்டேன். இயக்குநரும் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்றவுடனே, கண்டிப்பாக பண்றேன் என்று சொல்லிப்புட்டேன். படத்தின் தயாரிப்பாளர் புதியவர் எல்லாம் இல்லை, எனக்கு 30 ஆண்டு காலமாக அவரைத் தெரியும்.விஜயகாந்த் ஏதோ கத்தி எல்லாம் வைத்திருக்கிறார் என்று நினைச்சிடாதீங்க. நிச்சயமாக சொல்வேன், இப்படம் ஒரு மாறுபட்ட படம்.
தமிழ் மொழிக்காக நான் செய்கிற படம் ‘தமிழன் என்று சொல்'” என்று தெரிவித்தார்

Related Posts