புதுச்சேரியில் தரமற்ற பிபிஇகிட் ; கண்டுகொள்ளாத தமிழிசை மேடம்!

புதுச்சேரியில் தரமற்ற பிபிஇகிட் ; கண்டுகொள்ளாத தமிழிசை மேடம்!

தொடர்ந்து தாக்கி வரும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பி.பி.இ கிட் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தரமற்ற பிபிஇகிட் வழங்கப்படுவதாகச் செவிலியர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இது கவர்னர் (பொறுப்பு) கவனத்துக்கு போயும் பிரயோஜனமில்லையாம்.

tami may 23

புதுச்சேரியிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சென்றது. இதனால் தனியார் மருத்துவமனைகளையும் அரசு ஏற்று செயல்படுகிறது. தற்காலிகமாக டாக்டர்கள், செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பணிச்சுமை குறையவில்லை. இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 6 பேர் இம்மாதத்திலேயே இறந்துள்ளனர்.இதனால் சுகாதாரத்துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தங்களை காப்பாற்ற உயிர் காக்கும் உபகரணங்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஆச்சிஜன் படுக்கை, வென்டிலேட்டர் வசதி, மருந்து ஆகியவற்றை தட்டுப்பாடின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்னர். மேலும் சுகாதாரத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி வருகிறது.

இது குறித்து செவிலியர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “தரமற்ற பி.பி.இ கிட் குறித்து புதுவை ஆளுநர் மற்றும் செயலாளருக்குக் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கதிர் கிராமம் மருத்துவமனைக்கும், அரசு மருத்துவமனைக்கு, பலரின் உதவிகள் மூலம் உபகரணங்கள் வாங்கி கொடுத்தும், எங்களுக்குத் தரமான உபகரணங்கள் வழங்கப்படவில்லை. தரமில்லாத பிபிஇ கிட் அணிவதால் ஒரு மணிநேரத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து பாதுகாப்பு உடை அணிய முடியாமல் பலர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இது குறித்து புதுச்சேரி சுகாதாரச் செயலாளர், தரமான பி.பி.இ கிட் தான் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றும், எம்.எல்.ஏக்கள் யாரும் பதவியேற்காததால், கொரோனா பணிகளை துரிதபடுத்த முடியாமல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!