பாலியல்,கொலை குற்றங்களில் ஈடுபடும் மைனாகளும் பெரியவர்களே: அரசு முடிவு
கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16 வயதுக்கு மேற்பட்ட மைனர்களை வயது வந்தவர்களாக கருதி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு குறைவானர்கள் கொலை, பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்கள் புரிந்தாலும் அதிகபட்சம் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்க வழியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக பலாத்கார குற்றங்களில் மைனர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட இளம் குற்றவாளிக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்கியது. அதே சமயம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதே போல் மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கிலும் இளம் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கிடைக்கும்.
இதையடுத்து மைனர்களின் வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என பல்வேறு பெண்கள் மற்றும் சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வயது வரம்பை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட தள்ளுபடி செய்து விட்டது.16 வயதை கடந்த மைனர்கள் கொடூர குற்றங்களில் ஈடுபடும்போது அவர்களை வயது வந்தோராக கருதி கடுமையான தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இதற்கிடையில் கொடூர குற்றங்களில் ஈடுபடும் மைனர்களை வயது வந்தோராக கருத மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தியுள்ளது. 16 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள் கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்கள் புரியும் போது அவர்களை வயது வந்தோராக கருதி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இளம் சிறார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிய வருகிறது.
Government may treat juveniles as adults in rape, murder cases.
*******************************************************************************
Juveniles committing heinous crimes like murder or gangrape may be tried as adults under the Indian Penal Code. Government is seriously considering juveniles above 16 years committing heinous crimes be tried as adult.


