பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்:அஸ்ராம் பாபு ஆசிரமத்திற்கு சீல்!

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்:அஸ்ராம் பாபு ஆசிரமத்திற்கு சீல்!

அஸ்ராம் பாபு ஆசிரமத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். தொலைக்காட்சி கேமரா மேன் ஒருவரது கேமரா உடைக்கப்பட்டது.மேலும் பத்திரிகையாளர்களுக்கு இலேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.மேலும் அஸ்ராம் பாபுவின் ஜோத்பூர் ஆசிரமத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
Asaram Bapu booked
குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை இருக்கின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ‘அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்’ என அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, ஜோத்பூர் போலீசார் நேரில் ஆஜராகும்படி அஸ்ராம் பாபுவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.ஆஜர் ஆவதற்கு கடைசி நாளான நேற்று அஸ்ராம் பாபு போலீசில் ஆஜராகவில்லை. ஆனால் அஸ்ராம் பாபு சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் அஸ்ராம் பாபுவை கைது செய்வதில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என தங்களுக்கு தெரியவில்லை என்றும், அவரை பிடிக்க பல இடங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கோரியும், அஸ்ராம் பாபுவை கைது செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உண்னாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். அஸ்ராம் பாபுவை கைது செய்யாதவரை தாம் உணவு ஏதும் உட்கொள்ளப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

Supporters of Asaram Bapu attack mediapersons:

**********************************************************
Supporters of Asaram Bapu allegedly attacked a TV reporter and a cameraman at his ashram here as Rajasthan Police headed to Bhopal to interrogate the self-styled godman and make an arrest if he does not provide “concrete” defence.
Asaram’s supporters attacked the two mediapersons, leaving them injured.