டெல்லி மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு : சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் டெல்லி சிறுவர் நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவி கொலையில் சிறுவன் குற்றவாளி என சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்கியிருக்கவும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.3 ஆண்டு தண்டனை போதாது என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் வேதனை தெரிவித்துள்ளார்.
மா
டெல்லி மருத்துவ மாணவியும் அவரது நண்பரும் கடந்த டிசம்பர் -16 ம் தேதி இரவு பஸ்சில் சென்றுள்ளனர்.இந்த பஸ்சில் டிரைவர் உள்பட மொத்தம் 6 பேர் இருந்தனர். பஸ்சில் டிரைவர் ராம்சிங்குடன் இருந்தவர்கள் அந்த பெண்ணை கற்பழித்தனர். தொடர்ந்து தடுக்க வந்த மாணவனை பஸ்சில் இருந்து தள்ளி விட்டனர். மாணவி தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் டிரைவர் ராமன்சிங், முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் , இவர்களுடன் 16 வயது நிரம்பிய சிறுவன் ஒருவரும் அடங்குவார். இதற்கென விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது . 5 பேரில் ஒருவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மைனர் மீதான குற்றம் தனியாக சிறார் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. தற்போது சிறுவனுக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என மாணவியின் தாயார் கதறி அழுது வேதனை தெரிவித்துள்ளார்.
Juvenile accused in Delhi gang-rape case convicted, gets 3 years in special home
**********************************************************************************************
The Juvenile Justice Board on Saturday found a teenager guilty of the gang-rape and murder of a 23-year-old paramedical student in New Delhi in December last year, a crime that sparked protests across the country. “He has been convicted of rape and murder and sentenced to three years in a correctional home subject to review,” Anil Sharma, the chief investigating officer in the case,


