நோ சான்ஸ்! – ராஜிவ் கொலையாளிகள் ரிலீஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதில்!

நோ சான்ஸ்! – ராஜிவ் கொலையாளிகள் ரிலீஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதில்!

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும் சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.பின் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.இந்த வழக்கில் குற்றவாளிகள் 7 பேர் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டு தமிழக உள்துறை செயலகம் வாயிலாக கடந்த மார்ச்.2-ம் தேதி கடிதம் அனுப்பியது.
rajiv apr 20
மார்ச் 5-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்ததால், இது அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசு எடுத்த முடிவு என விமர்சிக்கப்பட்டது.தமிழக அரசின் முடிவிற்கு காங். பார்லி.யில் கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் மத்திய உள்துறை செயலர் தமிழக உள்துறை செயலர் ஞானதேசிகனுக்கு அனுப்பியிருந்த கடிதம் வாயிலாக, “ ராஜிவ் கொலையாளிகள் 7 விடுதலை தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதம் குறித்து, மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தை கேட்டது. இதனடிப்படையில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை”என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசின் கோரிக்கையை இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது,, 7 பேரை விடுதலை செய்ய கோரி 2014-ம் ஆண்டு பிப். மாதம் தமிழக அரசு முதல் கடிதம் எழுதியது. தற்போது கடந்த மார்ச் மாதம் இரண்டாவது கடிதம் அனுப்பியது. இதன் மூலம் இரண்டு கடிதங்களையும் மத்திய அரசு நிராகரித் துள்ளதாக கூறப்படுகிறது.