‘நூடுல்ஸ்’ -விமர்சனம்!

‘நூடுல்ஸ்’ -விமர்சனம்!

லாஸ்ட் வீக் இப்படத்தின் கதை பற்றியும் படம் உருவான அனுபவம் குறித்தும் டைரக்டர் அருவி மதனிடம் பேசிக் கொண்டிருந்த போது , “இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு ‘நூடுல்ஸ்’. அப்படி இரண்டே நிமிடங்களில் நமது தேவையை தீர்க்கக்கூடிய, நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால், நாயகி செய்த செயலால் அந்தக் குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. இனி அவ்வளவு தான் நம் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது, ஒரு நொடியில் அந்த பிரச்சனை வந்த சுவடே தெரியாமல் மறைந்தால், எப்படி இருக்கும்?, அப்படி ஒரு மனநிலையோடு ஒரு குடும்பத்தினர் சிக்கி தவிப்பதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வது தான் ‘நூடுல்ஸ்’”. என்று சொன்னார்.

அதன் படி நாயகன் ஹரீஷ் உத்தமனும் ஷீலா ராஜ்குமாரும் காதல் திருமணம் செய்து ஆஸியா என்ற பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்கள். லவ்வால் பிரிந்த ஷீலாவின் பெற்றோர் பத்து வருடங்களாக மகளை பார்க்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் ப்ளாட் குடியிருப்பில் வசிக்கும் நாயகனும், நாயகியும் வார இறுதி நாட்களில் தன் ப்ளாட்டில் குடியிருக்கும் மூன்று குடும்பங்களை அழைத்துக் கொண்டு மொட்டை மாடியில் லூட்டி அடிப்பது வழக்கம். இதனால் கடுப்பான அக்கம்பக்கத்தினரால் போலீஸ் நிலையத்திற்கு புகார் போன நிலையில் ஸ்பாட்டுக்கு வந்த, இன்ஸ்பெக்டர் அருவி மதன் எச்சரிக்கின்றார். இதில் டென்ஷனான ஹரீஷ் மற்றும் ஷீலா இன்ஸ்பெக்டர் அருவிமதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட அது பெரிய சண்டையாக மாறிவிடுகிறது. இதில் காண்டான இன்ஸ்பெக்டர் இவர்களைப் பற்றி இரவெல்லாம் அக்கம் பக்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை அறிந்து பதட்டமடைகிறார். . அதே நேரம் அவரது மனைவி ஷீலாவின் தாயும் தந்தையும் கோபம் குறைந்ததால் காலையில் அவர்கள் வீட்டுக்கு வருவதாகத் தகவல் வருகிறது.இந்நிலையில் அதிகாலையில் அவர்கள் குழந்தையின் கையில் இருந்த செல்போனை பிடுங்க வந்த திருடனை ஷீலா இழுத்துப் பிடித்து தள்ளியதில் அவன் விழுந்து நினைவிழக்கிறான். அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு இடையில் இந்தக் கொலைக் கேசும் சேர்ந்து விட்டால் தங்கள் நிலை என்ன என்று பயந்து போன ஹரிஷ் தனக்கு அறிமுகமான பக்கத்துத் தெரு வக்கீலை நாடுகிறார். வக்கீலும் இவர் வீட்டுக்கு வந்து இருவரும் பிணத்தை அப்புறப்படுத்த ட்ரை பண்னும் சமயம் இன்ஸ்பெக்டர் மீண்டும் வீட்டுக்கு வந்துவிட மூவரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். இறுதியில் இன்ஸ்பெக்டர் மதன் இவர்கள் மறைக்கும் காரணத்தை கண்டு பிடித்தாரா? அடிபட்ட நபர் என்ன ஆனார்? ஹரீஷ் மற்றும் ஷீலாவை இன்ஸ்பெக்டர் கைது செய்தாரா? இவர்களுக்கு உதவ வரும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் செய்த காரியம் என்ன? அனைவரும் இன்ஸ்பெக்டரிடமிருந்து தப்பித்தார்களா? ஷீலா பெற்றோரை சந்தித்தாரா? என்பதே நூடுல்ஸ் கதையின் க்ளைமேக்ஸ்.

இது நாள் வரை வில்லன் ரோலில் வந்த ஹரிஷுக்கு இதில் நாயகன் வேடம். அதிலும் பாசம் நிறைந்த காதல் கணவராகவும் மனைவி கொலை செய்து விட்டார் என்பதையறிந்தவுடன் தன் மீதே பழியை போட்டுக் கொண்டு சமாதானப் படுத்துவதும், இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் நடத்தி தெரியாமல் ஏதோ ஒரு ஃபுளோவில் இன்ஸ்பெக்டரிடம் “எனக்கு உங்களை விடப் பெரிய போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாரையும் தெரியும்…” என்று பந்தாவாகச் சொல்லி இக்கட்டில் மாட்டிக் கொண்டு முழித்து, இறுதிக் காட்சியில் அதிலிருந்து தப்பிக்கும் தருண ஃபீலீங்கை இலகுவாக எக்ஸ்போஸ் செய்து ஸ்கோர் செய்கிறார். ஒய்ஃப் சக்தியாக வரும் ஷீலா ராஜ்குமார் தன் கேரக்டரின் கனத்தை உணர்ந்து அதைக்கேற்ற நடிப்பை கொடுத்துள்ளார். ஏகப்பட்ட பட்ங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டிடாக வந்த அருவி மதன் இன்ஸ்பெக்டருக்கு உரிய உருட்டல், அதட்டலுடன்து அனைவரையும் அடிபணிய வைக்கும் போது பார்ப்போரையே சினம் கொள்ளவதில் ஜெயித்து விடுகிறார் ,

ப்ளாட்வாசி வேடத்தில் நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜெயந்தி, மஹினா, வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ஷோபன் மில்லர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது நடிப்பு மூலமாக திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள். வக்கீலாக வரும் வசந்த் மாரிமுத்து, ஆரம்பத்தில் கொஞ்சம் கெத்தாக தன் கேரக்டரை ஃபில்ட் செய்து விட்டு பிறகு திரையரங்கையே குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் வித்தையை அருமையாக செய்து உள்ளார். குழந்தை நட்சத்திரம் ஆழியா, சிறுவர்கள் என அனைவருமே மிக இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.

ஒரு முழு சினிமாவுக்குரிய கதை முழுக்க ஒரு 700 ஸ்கொயர் பீட் வீட்டுக்கள் அதிலும் சிறு அறைகளுக்குள் பயணித்தாலும் அந்த ஃபீலிங்கே ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கிய விதம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது. ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை அளவு. பெரும்பாளான காட்சிகளில் பின்னணியில் இசை பயணிப்பதே கேட்காதவாறு பின்னணி இசையமை கொடுத்திருப்பது காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

மினிமம் பட்ஜெட் என்பதால் லொகேசன் சேஞ்ச் செய்யவில்லை என்றாலும் டயலாக் கூட ரிபீட்டடாக வருவதுதான் கடுப்பேற்றுகிறது.. அதுவும் எடுத்துக் கொண்ட கதை மெல்லிய நூலிழை என்பதால் கனம் தாங்காமல் நொறுங்கி விடுகிறது.. முத்தாய்ப்பான முடிவுக்காக முழுப் படத்தைப் பார்க்கும் வைக்கும் பொறுமை சுருக்.. சுருக்.. செய்து கொண்டே இருக்கிறது.

ஆனாலும்  கிடைச்ச மாவில் சுட்ட வடை – இந்த நூடுல்ஸ்

மார்க் 3/5

error: Content is protected !!