பெருங்களத்தூர் Tang soo do karate Martial arts-கராத்தே பயிற்சிப் பள்ளியின் கராத்தே பெல்ட் டெஸ்ட்!

பெருங்களத்தூர் Tang soo do karate Martial arts-கராத்தே பயிற்சிப் பள்ளியின்  கராத்தே பெல்ட் டெஸ்ட்!

🦉சென்னை பெருங்களத்தூரில் உள்ள Tang soo do karate Martial arts– கராத்தே பயிற்சிப் பள்ளியில் செப்டம்ப ர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று கராத்தே பெல்ட் டெஸ்ட் (Karate Belt Test) நிகழ்ச்சியானது சென்னை வண்டலூர் அருகில் கொளப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி ஆடிட்டோரியத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குறிப்பாக கறுப்பு பெல்ட்டிற்கான டெஸ்ட் டில் தேர்ச்சிபெற்ற மாணவ மாணவியர் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர். இது பலரையும் வியக்க வைத்தது

கராத்தேயின் மிக முக்கிய பயிற்சியான கட்டா Formation ல் ஆரம்பித்து, தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பம், ஒற்றை நஞ்சாக்கு, இரட்டை நஞ்சாக்கு, நெருப்பில் ஸ்லாப் உடைத்தல், தற்காப்பு குழுச்சண்டை, முள்படுக்கையில் வீரர்கள் படுத்தபடி அவர்கள் மேல் பாறாங்கல்லை உடைத்தல், இரு சக்கரத்தை வீர்ர்கள் மேல் மரமுள் படுக்கையைச் சாய்த்து அவற்றின் மேல் ஏற்றுதல், வீர்ர்களின் கைகளில் கார் ஏற்றுதல் என அனைத்து சாகச நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை இருக்கை முனைக்கே கொண்டு வருமளவிற்கு பிரமிப்பூட்டின. இதற்காக கடந்த சில மாதங்களாக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை மட்டுமின்றி, பிற வண்ணங்களிலான பெல்ட் டெஸ்ட்களும் நடத்தப்பட்டன.

கிராண்ட் மாஸ்டர். டாக்டர். கலைச்செல்வன், கிராண்ட் மாஸ்டர் .இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி பெல்ட்டுகள் மற்றும் நற்சான்றிதழகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற எல்லா வகையிலும் அயராது செயல்பட்ட பயிற்சிப்பள்ளியின் நிர்வாகியும், தலைமை பயிற்சியாளருமான தீபன் கார்த்திகை அனைவரும் வெகுவாகப்பாராட்டினர்.

error: Content is protected !!