நாடு முழுவதும் 100 ஜிஎஸ்டி கிளீனிக்குகள்! – வர்த்தகர் கூட்டமைப்பு ஏற்பாடு

நாடு முழுவதும் 100 ஜிஎஸ்டி கிளீனிக்குகள்! – வர்த்தகர் கூட்டமைப்பு ஏற்பாடு

நாடெங்கும் ஒரே விலை; ஒரே வரி என்ற நோக்கில்தேசம் முழுவதும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி அமலாக்கப்படவுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பகாலத்தில், வர்த்தகர்களுக்கு பல்வேறு சந்தேகங்களும் நடைமுறை சிக்கல்களும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 100 ஜிஎஸ்டி கிளீனிக்குகள் அமைக்கப்படும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இந்த கிளீனிக்குகளை எச்டிஎப்சி வங்கி, டாலி சொல்யூசன்ஸ் (Tally Solutions) மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகியவற்றின் உதவியுடன் செயல்ப டுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் உள்ள 6 கோடி வணிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும் என சிஏஐடி அறிவித்துள்ளது. இந்த கிளீனிக்குகளில் ஜிஎஸ்டியின் அடிப்படைகள் பற்றி வியாபாரிகளிடம் தெரிவிக்கப்படும். அதன் இணக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள், வர்த்தகர்களின் கட்டாய ஒத்துழைப்பு மற்றும் கடமைகளை பற்றி தேவையான தகவல்கள், வர்த்தகம் குழப்பமின்றி நடைபெற செய்யவேண்டிய மாற்றங்கள், ஆகியவற்றை குறித்து விளக்கப்படும்.

இந்த கிளீனிக்குகள் குறித்து பேசிய சிஏஐடியின் தேசிய தலைவர் பி.சி பார்தியா மற்றும் பொதுச்செயலாளர் பிரவீன் கான்டெல்வால் ‘‘ நாடு முழுவதும் பெரும்பாலான வணிகர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பான விவரங்கள் தெரியவில்லை. அதனால் அவர்கள் தேவையற்ற பதற்றத்துடனும், அச்சத்துடனும் உள்ளனர். இந்த ஜிஎஸ்டி கிளீனிக்குகள் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் வணிக சங்கங்கள் ,எச்டிஎப்சி வங்கிகள், சந்தைகள் என வர்த்தகர்கள் எளிதில் செல்லக்கூடிய இடங்களில் இந்த கிளீனிக்குகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதேசமயம் ஜிஎஸ்டி பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிக விலைக்கு விற்கும் பல்வேறு பொருள்களுக்கு குறைவான வரி விதித்துள்ளது ஏன்? பிராண்ட் செய்யப்பட்ட உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கு ஏன் வரி விதிப்பு, இ-ரசீது வழங்குவது ஒத்திவைப்பு, குறைந்தபட்சம் ஆறுமாதமாவது எச்.எஸ்.என் குறியீடுகளை பயன்படுத்த வேண்டுகோள், ஜூலை முதல் 9 மாதங்கள் இடைக்காலம் என அறிவிப்பு இஐ எல்லாம் குழப்பம் தருகின்றன. இவற்றை விளக்க இந்தக் கிளீனிக்குகள பயனபடும் என பிரவீன் கான்டெல்வால் கூறினார்.

Related Posts