நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! – தேர்தல் கமிஷனர் சீரியஸ் பேட்டி!

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! – தேர்தல் கமிஷனர் சீரியஸ் பேட்டி!

“இந்தத் தேர்தலின் போது பண பரிவர்த்தனைகளை தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித் தோம். இது பண பட்டுவாடாவுக்கான மாநிலம் என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தெரியும். எனவே இந்த அவலநிலையை குறைப்பதற்கு கடுமையான நடவடிக்கை தேவையாக உள்ளது.எனவே கடந்த 2 நாட்களாக தேசிய மற்றும் மாநில அளவிலான அமலாக்க முகமைகளுடன் கலந்து ஆலோசித்தோம். அந்த வகை யில், பண பட்டுவாடாவை தடுப்பதற்கு சில புதிய உத்திகளை உருவாக்கி இருக்கிறோம் “ என்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தெரிவித்தார்.
tn apr 0
தமிழக சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷ னர் நசீம் ஜைதி மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் சென்னை வந்தனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சியினரையும் அங்கு அழைத்து நசீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். அவர்கள் கூறிய ஆலோசனைகள், குற்றச்சாட்டுகளை அவர் கேட்டு அறிந்தார்.அதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நசீம் ஜைதி, “தமிழகத்தில் தற்போ துள்ள நிலை பற்றி அரசியல் கட்சிகளிடம் இருந்து நல்ல கருத்துகளை பெற்று இருக்கிறோம். ஓட்டுக்காக பணம் கொடுப்பதையும், இலவச பொருட்கள் கொடுப்பதையும் தடுக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. பறக்கும்படையில் மத்திய போலீஸ் படையும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை மக்கள் மத்தியில் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பல்வேறு அரசியல் நடவடிக்கைகளுக்கு தேவையான அனுமதியை 24 மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும் என்றும், சில டி.வி. சேனல்கள் அரசியல் எதிரிகளான தனிப்பட்ட நபர்கள் பற்றி அவதூறு தகவல்களை பரப்பு வதை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.தேர்தல் விதிமுறைகள் மீறப் படுவது தொடர்பாக தரப்படும் புகார்களை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் தீர்க்க வேண்டும் என்றும், மாநில அரசு நடத்தும் கேபிள் டி.வி. நிறுவனத்தை கண்காணித்து நடுநிலையுடன் செயல்படச் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டு உள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமுதாயத்தில் பின்தங்கியுள்ள பலவீனமான மக்கள் வாக்களிக்கும் வகையில் தனி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் பயமில்லாமல் வந்து வாக்களிக்கும் வகையில், அங்கு மத்திய போலீஸ் படை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வாக்களிப்பதற்கான ஒரு அடையாள ஆவணமாக ‘பூத்’ சிலிப்புகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், வாக்களிப்பதற்கு ஏதுவாக விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர். பல இடங்களில் தபால் ஓட்டுகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர்களுக்கு நாங்கள் உறுதி அளித்து இருக்கிறோம்.

தேர்தலின் போது பண பரிவர்த்தனைகளை தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்தோம். இது பண பட்டுவாடாவுக்கான மாநிலம் என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தெரியும். எனவே இந்த அவலநிலையை குறைப்பதற்கு கடுமையான நடவடிக்கை தேவையாக உள்ளது.எனவே கடந்த 2 நாட்களாக தேசிய மற்றும் மாநில அளவிலான அமலாக்க முகமைகளுடன் கலந்து ஆலோசித்தோம். அந்த வகையில், பண பட்டுவாடாவை தடுப்பதற்கு சில புதிய உத்திகளை உருவாக்கி இருக்கிறோம்.

முதலாவதாக, அமலாக்க முறைகளை மேலும் வலுப்படுத்துவது, இரண்டாவதாக, மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே அதிக அளவில் பரவச் செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் செலவினப் பார்வையாளராக ஒருவர் நியமிக்கப்பட்டு வந்தார். ஆனால் இதுவரை இல்லாத அளவில் இந்த தேர்தலில் கூடுதலாக ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளையும், மாவட்டங்களில் கூடுதலாக தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்க முடிவு செய்து உள்ளோம்.

பறக்கும் படையின் செயல்பாட்டை மேலும் தீவிரப்படுத்துவற்காக தேர்தல் நடக்க இருக்கும் கடைசி வாரத்தில் பயிற்சியில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்து உள்ளோம்.பொதுவாக, வேட்புமனு தாக்கலின் போதுதான் செலவினப் பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்கள். ஆனால் இந்த முறை அதற்கு முன்பாகவே வெளிமாநிலத்தைச் சேர்ந்த போலீசாரும், செலவின பார்வையாளர்களும் தமிழகத்துக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மே மாதம் முதல் வாரத்தில் இருந்து, பறக்கும்படையில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அதுபோல் துணை ராணுவத்தினரும் அதில் இடம் பெறுவார்கள். இதன் மூலம் பறக்கும் படையின் நடுநிலைத் தன்மை மீது சந்தேகம் எழாமல் பார்த்துக் கொள்ளப்படும். பறக்கும் படையின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும்.

பணம் கொண்டு செல்வதை கண்காணிக்கவும், கைப்பற்றவும் வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளை வருமான வரித்துறை வரவழைக் கும். தற்போது 700 வருமான வரித்துறையினர் இந்த பணியில் உள்ளனர். அனைத்து உதவி கமிஷனர்களும் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் விசாரணைக்கான துணை கமிஷனர்களாக இயங்க அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்களின் சொத்து பற்றிய பிரமாணப்பத்திரங்கள் அனைத்திலும் சரியான தகவல்கள் தரப்பட்டுள்ளதா என்பதை உரிய காலத்தில் வருமான வரித்துறை ஆய்வு செய்யும்.துறைமுகம், விமான நிலையங்கள் போன்ற பகுதிகளை கண்காணிப்பதற்கு வருவாய் புலனாய்வுத் துறையினர் ஒப்புக் கொண்டு உள்ளனர். இவையெல்லாம், அமலாக்க முறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகும்.

ஓட்டுக்காக பணம் வாங்குவது சட்டப்படி குற்றமாக கருதப்படும் என்றும், மனசாட்சியின்படி வாக்களிக்கவேண்டும் என்றும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.‘எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்ற பிரசாரம், மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பிரபலமானவர்கள் மூலம் செய்யப்படும். ஓட்டுக் காக பணம் வாங்கமாட்டோம் என்று மக்களை உறுதிமொழி ஏற்கச்செய்வதோடு, மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினரையும் வேட்பாளர்களையும், ஓட்டுக்காக பணம் கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க ஊக்கம் அளிப்போம்” என்று தெரிவித்தார்

Related Posts