நம் நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைஞ்சிட்டே போகுது!

நம் நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைஞ்சிட்டே போகுது!

இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. பெண் சிசுக்கொலை, ஆண் குழந்தையே போதும் என்ற மனநிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு அண்மையில் சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்திருந்தது.அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு சுமார் 875 பெண்கள் என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
girll child july 2
‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று குழந்தைகள் பிறப்பு குறித்து தமிழகத்தில் தொன்றுதொட்டு பெரியவர்கள் கூறுவது வழக்கம். அந்த காலத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களே ‘ஒரு மினி கிராமம்’ அளவுக்கு பெருகி கிடந்த காலம் உண்டு. வண்டி கட்டி வெளியூர்களுக்கு ஒரு குடும்பமே சென்று வரும். ஆண்டுதோறும் ‘குழந்தைகள் அறுவடை’ என்று இருந்த காலம் மெல்ல மாறியது. பெருகி வரும் பிள்ளைகளால் வேலை வாய்ப்பு இல்லாமை, குடும்ப வறுமை, சமூகத்தில் குற்றங்கள் போன்றவை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள் தொகை சுமார் 128 கோடி. இதில் ஆண்கள் சுமார் 66 கோடி, பெண்கள் 62 கோடி. ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் 51 குழந்தைகள் பிறக்கின்றன. இதையொட்டி ஒரு பொதுநல வழக்கில் பெண் குழந்தைகள் சரிவு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டுமென சுப்ரீம் கோர்ட் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது.

இதனிடையேதான் பெண் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 2001–ம் ஆண்டு 1000 பேருக்கு 927 என்ற அளவுக்கு இருந்த பெண்கள் விகிதம் 2011–ம் ஆண்டில் 918 ஆக குறைந்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.அரியானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களான மகேந்திரகார்க், ஜாஜ்ஜார், ரேவாரி, சோனாபட் மற்றும் அம்பாலா, இமாசலபிரதேசத்தில் உள்ள உனா மற்றும் ஜம்மு ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்து உள்ளது. மாநில அளவில் கேரளாவில் (950) தான் அதிக அளவு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளது. குழந்தை பிறக்கும்போது ஏற்கனவே உள்ள குழந்தைகள் பிறந்தால், ஆண் குழந்தை என்றால் ஏற்றுக்கொள்கின்றனர். பெண் குழந்தை என்றால், ‘ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும்போது, இதையும் வளர்த்து ஆளாக்கி கட்டி கொடுக்கணுமே’ என்ற பயத்தில் பிறந்தவுடன் கொன்று விடுகின்றனர். அதுதான் சிசுக்கொலை. தமிழகத்தில் ஒரு காலத்தில் உசிலம்பட்டியில் பரபரப்பாக பேசப்பட்டதே அந்த சம்பவம்தான்.‘மூக்கில் நெல்மணியை போடுவது, கள்ளிப்பால் ஊற்றுவது’ உள்ளிட்டவைகளில் பெற்றோர் அல்லது உடனிருப்போர் இந்த கொடிய வேலைகளில் ஈடுபடுகின்றனர். தற்போது இம்முறை தமிழகத்தில் கட்டுக்குள் வந்தாலும், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.ஒரு சில பெற்றோர் ஸ்கேன் சென்டர்களில் தங்களுக்கு முதல் குழந்தை என்று பொய் சொல்லி, என்ன குழந்தை என்பதை அறிந்து கொண்டு கருக்கொலை செய்து விடுகின்றனர்.

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் புதிய ஆய்வின்படி மருத்துவ சிகிச்சையில் பெரும்பாலானவர்கள் ஆங்கில மருத்துவ சிகிச்சையைத்தான் விரும்புகிறார்கள். சுமார் 90 சதவீதம் பேர் இந்த சிகிச்சை முறைகளைதான் பெறுகிறார்கள். இதில் கிராமப்பகுதியில் 71 சதவீதமும், நகர்ப்புறங்களில் 78 சதவீதத்தினரும் உள்ளனர். 6 சதவீத மக்களே ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை பின்பற்றுவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.