தேசிய பீச் வாலிபால்: தமிழக பெண்கள் அணிக்கு சாம்பியன் பட்டம்

தேசிய பீச் வாலிபால்: தமிழக பெண்கள் அணிக்கு சாம்பியன் பட்டம்

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆதரவுடன் 15-வது தேசிய பீச் வாலிபால் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது.கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-1 அணி (ஹேமமாலினி-நர்மதா) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ஆந்திரா1-ஐ(மகேஷ்வரி–சாந்தி) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
Beach-VolleyBall 1
தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆதரவுடன் 15-வது தேசிய பீச் வாலிபால் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் (அண்ணா நீச்சல் குளம் அருகில்) கடந்த 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடந்தது. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடந்த இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் கலந்து கொண்டன. தினசரி காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆட்டம் நடந்த நிலையில் .கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-1 அணி (ஹேமமாலினி-நர்மதா) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ஆந்திரா1-ஐ(மகேஷ்வரி–சாந்தி) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் ஆந்திரா வைல்டு அணி (ரவீந்திர ரெட்டி-காசி) 12-21, 27–25, 15–10 என்ற செட் கணக்கில் போராடி ஆந்திரா1 (நரேஷ்-பாண்டு) அணியை சாய்த்து பட்டத்தை கைப்பற்றியது. இதன் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் ஆட்டத்தில் தமிழ்நாடு1 அணி (சிவபாலன்–தாமு) 21-15, 21–15 என்ற நேர் செட்டில் தமிழ்நாடு- 4 அணியை (மோகன் –பாலாமணி) வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.சாம்பியன் பட்டம் வென்ற ஆண்கள் அணிக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கோப்பையும், ரூ.10 ஆயிரமும், பெண்கள் அணிக்கு காஸ்கோ கோப்பையும், ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. 2-வது, 3–வது, 4–வது இடங்களை பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.8 ஆயிரம், ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம் வீதம் அளிக்கப்பட்டது.