32°C
விளம்பரம்
Advertisement

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் ஜாப் வேணுமா?

admin Published: January 21, 2016 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



இந்தியாவிலுள்ள தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி எனப்படும் டி.எம்.பி., வங்கி தனது தனித்துவமான வாடிக்கையாளர் சேவைகளுக் காக அனைவராலும் அறியப்படுகிறது. நவீனமய வங்கிச்சேவை, வாடிக்கையா ளரை மையப்படுத்திய அணுகுமுறை, நாடு தழுவிய கிளைகள் போன்றவற்றிற்காக பிரசித்தி பெற்ற டி.எம்.பி., ஆரம்ப நாட்களில் தி நாடார் பேங்க் என்ற பெயருடனே நிறுவப்பட்டது. பின்னர் இது தற்போதைய பெயருக்கு மாற்றம் பெற்றது. சிறந்த தனியார்துறை வங்கிக் கான விருதினையும் இந்த வங்கி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியில் காலியாக உள்ள கிளரிக்கல் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

tmb jan 21

வயது: 30.11.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகளாக இருந்தால் 24 வயதுக்கு உட்பட்டும், முது நிலைப் பட்டதாரிகளாக இருந்தால் 26 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: கலை மற்றும் அறிவியல் புலங்களில் பட்டதாரிகளாக இருந்தால் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், அல்லது முது நிலைப் பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளாக இருந்தால் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக கம்ப்யூட்டர் தொடர்புடைய தகுதி தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.1.2016

இணையதள முகவரி: http://www.tmb.in/

உடனடி செய்திகள்