“கடல்லே மீனை காணோம்!”- என்று குரல் எழுப்பும் காலம் வரப் போகுது..- தீர்வு என்ன?

“கடல்லே மீனை காணோம்!”- என்று குரல்  எழுப்பும் காலம் வரப் போகுது..- தீர்வு என்ன?

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டு வதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050-ம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும். அதனால் பலரும் கடல்லே மீனை காணோம்- என்று குரல் எழுப்பும் அபாயமான நிலை உருவாகும்.தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டு களில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 மடங்காக அதிகரித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் இரட்டிப்பாகும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது.இந்த தகவலை உலக பொருளாதார பேரவை அமைப்பு வெளியிட்டுள்ளது
edit jan 22
இதனிடையே கடலில் பெருமளவுக்கு மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த, கடலோர பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை கட்டுப்படுத்தினாலே போதும் என்கிறது ஒரு புதிய ஆய்வு. பசிபிக் பெருங்கடலில் பெரிய தீவுகளாக பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் மிதக்கின்றன. நடுக் கடலில் மிதக்கும் அந்த கழிவுகளை இயந்திரங்கள் மூலம் அகற்றுவதற்கு பெரும் செலவு செய்வதை விட கடற்கரை யோரங்களில் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்போரை அதிகரிப்பது நல்ல பலன் தரும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த கிராந்தாம் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவரான எரிக் வான் செபைல் ‘கடற்கரையோர நகரங்களிலிருந்து கடற்கரை வழியாகத்தான் பெருமளவு பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன. எனவே அவற்றை இலக்கு வைத்து தடுப்பதுதான் நடைமுறையை ஒட்டிய தீர்வாக இருக்கும்’ என்கிறார்.

கடற்கரைக்கு அருகாமையில் மிதவைகளை நிறுவி கடலுக்குள் வரும் பிளாஸ்டிக் கழிவுகளை திரட்டி ஒட்டு மொத்தமாக அகற்ற முடியும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.உதாரணமாக 2015 முதல் “2025க்குள் சீனா மற்றும் இந்தோனேசிய தீவுகளின் கடற்கரைகளில் பிளாஸ்டிக் சேகரிப்பவர்களை பெருமளவு வேலைக்கு அமர்த்தினால் 31 சதவீத நுண் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கலப்பதிலிருந்து தடுக்க முடியும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பல நுண் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை கடல்வாழ் நுண் உயிரிகள் தவறுதலாக உண்பதால் தான் அவை நடுக்கடலில் வந்து சேர்ந்து மிதக்கும் தாவரங்களை அழித்து விடுகின்றன என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு, ‘என்விரோன்மென்டல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!