டேக் 2 சீன் 3 : தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: கனமழைக்கு வாய்ப்பு
கடந்த நாலைந்து நாட்களாக வங்கக் கடலில் லைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போதும் தென் மேற்கே இலங்கை கடற்பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில், தெற்கு அந்த மான் கடலில் காற்றழுத்த தாழ்வு ஒன்று புதிதாக உருவாகியுள்ளது. இதன் தாக்கம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இது வங்கக் கடலின் தென் மேற்கே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதனை யடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளின் பெரும்பாலான மாவட்டங் களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானிலை பொது வாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், “நேற்று முன்தினம் தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இந்த இரு நிகழ்வு காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும்.நகரின் சில பகுதியில் கனமழை பெய்யும். அந்தமான் அருகே உருவான குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலை தமிழகம் அருகே வந்தால், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளது”என்று தெரிவித்தார்.


