32°C
விளம்பரம்

இந்திய மக்கள் தொகையின் ஒட்டு மொத்த ரியல் மெடிக்கல் ஷாக் ரிப்போர்ட்!

admin Published: November 29, 2015 2 நிமிட வாசிப்பு Updated: November 30, 2015 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியா தான் என்றால் அது மிகையல்ல.இதைக் கவனத்தில் கொண்டு மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இப்பரிந்துரையை இன்று வரை இந்தியா சட்டை செய்ய வில்லை. இத னால்தானோ என்னவோ 1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவ மனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள் ளது. 1980களில் மக்களின் ஒட்டு மொத்த மருத்துவச் செல வில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 14% ஆகக் குறைந்து விட்டதாம். ஆனாலும் தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளி வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆக உயர்ந்துவிடுமாம்.
edit nov 29
இந்நிலையில் நம் நாட்டுமக்கள் மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வெளிப்புற காரணி களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதைவிட, உடல் ரீதியாகவே மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளதாக செஸ்ட் ரிசர்ச் பவுண்டே சன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. செஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் நடத்திய ஆய்வின் முடிவுகளை சுந்தீப் சால்வி வெளியிட்டுள்ளார். அதில்,”இந்தியா வில்  தினமும் 3.5 கோடி பேர் ( 35 மில்லியன்) உடல்நலக் குறை பாடு காரணமாக, டாக்டர்களை நாடுகின்றனர். இந்த மக்கள் எண்ணிக்கை, கனடா நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் என்றும், இந்தியாவில் உள்ள நான்கு மெட்ரோ நகரங்களான டில்லி, மும்பை. கோல்கட்டா மற்றும் சென்னையில் உள்ள மொத்த மக்கள் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சர்வதேச அளவில், 2015ம் ஆண்டில் மக்கள் தொகை 7.5 பில்லியன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 1.2 பில்லியன் மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். தற் போதைய இந்தியாவில், சமீபகாலமாக, மற்றொருவருடனான தொடர்பின் மூலம் பரவும் நோய்களை (பால்வினை நோய்கள்) விட, இதர நோய்களாலேயே, அதிகளவிற்கு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.குறிப்பாக சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்களாலேயே, சமீபகாலமாக அதி களவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. காற்று மாசுபாட்டினால், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, சுவாசக்கோளாறுகளின வீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியுள்ளதும். மாசுபாட்டினை குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தி யுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

அத்துடன் இந்தியாவில், உணவுப்பாதையில் குறைபாடு தொடர்பாக 25 சதவீதம் பேரும், ரத்த ஓட்ட குறைபாடு தொடர்பாக 12.5 சதவீதம் பேரும், தோல் சிகிச்சைக்காக 9 சதவீதம் பேரும், சுரப்பி கோளாறுகள் காரணமாக 6.6 சதவீதம் பரும், உயர்ரத்த அழுத்தம் தொடர்பாக 14.52 சதவீதம் பேரும், சுவாசக்கோளாறு தொடர்பாக 14.51 சதவீதம் பேரும் மற்றும் சுவாசப் பாதையில் பாதிப்பு தொடர்பாக 12.9 சதவீதம் பேரும் டாக்டர்களை நாடுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்களில், கிட்டத்தட்ட 18 சதவீதம் பேர் மரணத்தையும் மற்றும் 20 சதவீதம் பேர் உடல்ஊனத்தன்மையையும் அடைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

உடனடி செய்திகள்