32°C
விளம்பரம்
Advertisement

செம்மொழி தமிழாய்வு நிறுவன விருதுகள் அறிவிப்பு!

admin Published: September 4, 2013 2 நிமிட வாசிப்பு தமிழகம்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் செம்மொழி தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்ட 7 பேருக்கு விருதுகள் வழங்கி வருகிறது. இதையடுத்து 2009 முதல் 2011ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை குடியரசு தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் தொல்காப்பியர் விருது, குறள்பீட விருதுகள் பெறுவோருக்கு தலா 5 லட்சம் ரொக்க பரிசும், சான்றிதழ், பொன்னாடையும் வழங்கப்படும். இளம் அறிஞர் விருதுகள் பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
sep 3_thiruvalluvar
இதன்படி குடியரசு தலைவரின் செம்மொழி விருதுகளை தமிழகத்தை சேர்ந்த 11 பேர் பெறுகின்றனர். 2009,2011ம் ஆண்டுக்கான ‘தொல்காப்பியர் விருது’ முனைவர் ஐராவதம் மகாதேவன் பெறுகிறார். 2010,2011ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பேராசிரியர் தமிழண்ணல் பெறுகிறார். அயல்நாட்டு அறிஞருக்கு வழங்கப்படும் ‘குறள்பீடவிருது’ செக் குடியரசை சேர்ந்த முனைவர் ஐரோஸ்லாவ் வசேக் பெறுகிறார். ‘இளம் அறிஞர் விருது’ மதுரையை சேர்ந்த முனைவர் டி.சுரேஷ், அண்ணாமலைநகரை சேர்ந்த முனைவர் எஸ்.கல்பனா, நாமக்கல்லை சேர்ந்த முனைவர் ஆர்.சந்திரசேகரன், சென்னையை சேர்ந்த முனைவர் வாணி அறிவாளன், சிவகாசியை சேர்ந்த முனைவர் சி.முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் பெறுகின்றனர்.

2010,2011ம் ஆண்டுக்கான அயல்நாட்டு அறிஞருக்கு வழங்கப்படும் குறள்பீட விருது இங்கிலாந்தை சேர்ந்த முனைவர் ஜான் ரால்ஸ்டன்மார், இளம் அறிவியல் விருதுகள் மதுரையை சேர்ந்த முனைவர் டி.சங்கய்யா, ஆத்தூரை சேர்ந்த முனைவர் ஏ.ஜெயக்குமார், புதுச்சேரியை சேர்ந்த முனைவர் ஏ.மணி, காரைக்குடியை சேர்ந்த முனைவர் சி.சிதம்பரம், மதுரையை சேர்ந்த முனைவர் கே.சுந்தரபாண்டியன் ஆகியோர் பெறுகின்றனர்.

உடனடி செய்திகள்