கிஸ் – விமர்சனம்!

கிஸ் – விமர்சனம்!

மிழ் சினிமாவில் காதல் மிக அதிகமாகவே பேசுபடு பொருளாக அமைந்திருக்கிறது. தேவதாஸ், அரிச்சந்திரா என புராண, இதிகாச காதல் தொடங்கி ஓ.கே. கண்மணி, லவ் டுடே என இன்றைய நவீன காதல் வரை தமிழ் சினிமாவில் பேசப்படாத காதல் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆண்டுதோறும் புதுப்புது கோணங்களில் காதலை தமிழ் சினிமா அணுகியுள்ள சூழலில் காதலுடன் ஃபேன்டசியை மிக்ஸ் பண்ணி லாஜிக்கே இல்லாமல் ஜாலியான ஒரு சினிமா வழங்க முயன்றிருக்கிறார்கள்.

அதாவது காதல் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுத்து ஒதுக்கும் குணம் கொண்டவர் நாயகன் கவின். அவருக்கு ஹீரோயின் ப்ரீத்தி மூலமாக ஒரு பழங்கால புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகம் கைக்கு வந்த பிறகு யாராவது முத்தமிட்டுக் கொள்வதை கண்டால் அவர்களின் எதிர்காலம் நெல்சனின் மனக்கண்ணில் விரிகிறது. அதை இவர் மூலம் தெரிந்து சில காதல் ஜோடிகள் பிரித்து விடுகிறார்கள். இதில் கொஞ்சம் மிரண்டு போன ஹீரோ அந்தப் புத்தகத்தை திருப்பி கொடுப்பதற்காக அந்த பெண்ணை தேடிச் செல்கிறார். சாரா வில்லியம்ஸ் (ப்ரீத்தி அஸ்ரானி) என்ற அந்த பெண் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். அவரைக் கண்டது காதல் வயப்படும் நெல்சனுக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய எதிர்காலமே கண் முன்னால் வருகிறது. எதிர்கால அசம்பாவிதங்களை அவரால் தடுக்க முடிந்ததா? நாயகியுடன் அவர் இணைந்தாரா என்பதுதான் ‘கிஸ்படக்கதை.

ஹீரோ கவின் மற்றும் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இரண்டு பேருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி காட்சிகளும் இயல்பாகவே சூப்பராக அமைந்துள்ளது. ஆனால் இருவருக்குமான காதலுக்கான சரியான காரணம் படத்தில் சொல்லப்படவில்லை. கவின் தன்னுடைய முந்தைய படங்களை விட சிறப்பான நடிப்பை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.ஆனால் ஏனோ இயல்பான ஆக்டிங்காக தோன்றவில்லை.

ஆர்.ஜே.விஜய், தேவயானி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோரு படத்துக்கு தேவையான பெர்ஃபாமன்ஸை தந்திருக்கின்றனர். படம் முழுக்க தன்னுடைய ஒன்லைனர்களால் கலகலக்க வைக்கிறார் விடிவி கணேஷ். அவர் வரும் காட்சிகள் அனைத்துமே சரவெடியாய் இருக்கிறது. அதிலும் காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயலும் இளைஞனை, அவர் கையாளும் காட்சி அபார சிரிப்பு

கேமராமேன் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கலர்புல்லாக இருருப்பதோடு, கதாபாத்திரங்களில் இருக்கும் இளமையை காட்சிகளிலும் பிரதிபலிக்கும் வகையில் வழங்கி மெருகேற்றியுள்ளார்

மியூசிக் டைரக்டர் ஜென் மார்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கொஞ்சமும் எடுபடவில்லை என்றாலும் படத்துக்கு பாதகம் செய்யவில்லை.

உம்மா புகழ் விஜய்சேதுபதி குரலில் தொடங்கும் மன்னர் காலத்து கதை முடிந்து நிகழ்கால கதைக்கு வந்து படத்தில் ஹீரோவுக்கான பிரச்னைக்கு வர இடைவேளை ஆகிவிடுகிறது. இதற்கிடையேயான காட்சிகள் சுவாரஸ்யமாக இல்லை. இரண்டாம் பாதியில் இருக்கும் சில சுவாரஸ்ய காட்சிகள், காமெடிகள்போல முதல் பாதியிலும் இருந்திருக்கலாம். மேலும் ஹீரோவும் ஹீரோயினும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லை என்ற நிலையில் பிரிந்தும் விடுகிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று புரியாமல் விழிக்க வைத்து விடுகிறார்கள்.

மேலும் காமெடி ஜானரில் ஒரு லவ் ஸ்டோரி என்ற அளவுகோலில் மட்டுமே இந்த கிஸ்ஸை கொடுத்துள்ளார் டைரக்டர் சதீஷ். லாஜிக், எமோஷனல் பற்றியெல்லாம் கவலை இல்லை. ஜாலியாக இரண்டு மணி நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற நினைப்போருக்கான படமிது

மார்க் 2.25/5

Related Posts