தமிழ் குரல் / AI Voice
கிரெடிட் கார்டு மோசடிகளுக்கு, வங்கி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரத்தில், கிரெடிட் கார்டு இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து முடிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தற்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முறை என்பது 2 வங்கிகளை சார்ந்து நடைபெறும் தொழில்நுட்ப ரீதியான பணப் பரிமாற்றமாக இருக்கிறது. அதாவது, கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியும், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கான கருவியை வழங்கிய வங்கியும் ஆகும். இதில், ஒரு குறிப்பிட்ட கிரெடிட் கார்டு இயந்திரத்தில் இருந்து மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டால், கிரெடிட் கார்டு வழங்கிய வங்கி, அதற்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை ஏழு நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஜூலை 1ம் தேதியே அமலுக்கு வந்திருக்க வேண்டிய இந்த நடைமுறை, வங்கிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தள்ளிப் போனது.
கிரெடிட் கார்டு முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், வங்கிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்திருந்தது. அதன்படி, கிரெடிட் கார்டுகளில், பாதுகாப்புக் காரணங்களுக்காக ‘சிப்’களைப் பொருத்துவதுடன், அதனை உரிய முறையில் பயன்படுத்தும் வகையில் கிரெடிட் கார்டு இயந்திரங்களை மேம்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இதனை செய்ய வங்கிகள் தவறி விட்டன. இதனால், கூடுதல் கால அவகாசம் வேண்டும் என வங்கிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், அதனை ஏற்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
Banks to pay for credit card frauds, RBI says
***********************************************************
The Reserve Bank of India has refused to extend the deadline for upgrading security on credit card swipe machines and has ordered banks to compensate cardholders in seven days if any fraud occurs on non-compliant terminals.
