கலாபவன் மணி காலமானார்: ஆனால் விஷமருந்தியதால் மரணமா? கேரளா ஷாக்

கலாபவன் மணி காலமானார்: ஆனால் விஷமருந்தியதால் மரணமா?  கேரளா ஷாக்

பிரபல மலையாள திரைப்பட நடிகரும், தமிழ் சினிமாவில் கூடத் தனி முத்திரை பதித்தவருமான கலாபவன் மணி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான கோளாறுகள் காரணமாக அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இந்தத் தகவல் வெளியானதும், பலரும் நம்ப முடியாமல் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். மம் முட்டி, பிருத்விராஜ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் பகிர்ந்தனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
kala mar 7
ஆட்டோ டிரைவராக இருந்து, பின்னர் மிமிக்ரி கலைஞராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய கலாபவன் மணி, தென்னிந்திய சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்கள் மூலம் முத்திரைப் பதித்தவர். 200-க்கும் மேற்பட்ட படங் களில் நடித்தவர். அக்‌ஷரம் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனாலும், திலீப் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற சல்லாபம் என்ற படத்தில் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததன் மூலம் முக்கிய நடிகராக கவனம் பெற்றார். ‘வாசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்’ என்ற படத்துக்காக 1999-ல் சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை வென்றார். அதே படத்துக்காக 2000-ல் சிறப்பு ஜூரி பிரிவில் தேசிய விருதைப் பெற்றார்.

தமிழில் ‘ஜெமினி’ படம் மூலம் கவனத்தை ஈர்த்த கலாபவன் மணி, சமீபத்தில் வெளிவந்த கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தில் உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.மனைவி நிம்மி, மகள் வாசந்தி லக்‌ஷ்மி உடன் கலாபவன் மணி வாழ்ந்து வந்தார்.கலாபவன் மணியின் பெயருக்கு முன்னால் உள்ள கலாபவன் என்பது, கழுத்தையும் உடலையும் வளைத்துப் பலவிதமாக மிமிக்ரி செய்ய அவருக்குக் கற்றுக்கொடுத்த கலைப் பள்ளியின் பெயராகும். இது கொச்சியில் அமைந்துள்ளது.

இதனிடையே கலாபவன் மணியின் உடலில் விஷம் கலந்திருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது கலா பவன் மணி தனது இல்லத்தில் நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்த தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு இன்று காலை 10 மணியளவில் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 11 மணிமுதல் பொதுமக்கள் அஞ்சலிகாக அவரது உடல் வைக்கப்படுகிறது.

அவரது உடலுக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, மலையாள திரைப்பட நட்சத்திரங்கள், மோகன்லால், மம்முட்டி, சுரேஸ்கோபி உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கபுடுகிறது. அதன் தொடர்ச்சியாக மாலை 5 மணியளவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.இதனிடையேதான் மறைந்த கலாபவன்மணியின் உடலில் விஷம் கலந்திருந்ததாக அவரை சோதித்த மருத்துவர்கள் காவல்துறையிடம் கூறியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக்த் தகவல் வெளியாகியுள்ளது