கம்யூனிஸ்ட்டுகளின் நன்றிக்குரியவர்கள் நாட்டு மக்கள்.By குமரேசன் அசாக்

கம்யூனிஸ்ட்டுகளின் நன்றிக்குரியவர்கள் நாட்டு மக்கள்.By குமரேசன் அசாக்

நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 0.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பெரும் தோல்வி அடைந்துள்ளன.போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டுகளை இழந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெற்றிருந்தன. அத்தேர்தலில் இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் வென்றன. 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இக்கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. அத்தேர்தலில் இரு கட்சிகளும் தலாஒரு இடத்தில் வென்றன. 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இக்கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. அத்தேர்தலில் இரு கட்சிகளும் தலா 2 இடங்களில் வென்றிருந்தன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 9 இடங்களில் போட்டியிட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2,19,866 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது வாக்கு சதவீதத்தில் 0.5 மட்டுமே ஆகும். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,20,614 வாக்குகளை பெற்றுள்ளது. மேலும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழ்ந்துள்ளன.
comunist sympal
இதெற்கெல்லாம் மதவாதம், கார்ப்பரேட் விளம்பர வியூகம், பணபலம், உலகமய-தனியார்மய பொருளாதாரத்தால் வாழ்வு வளம் பெறும் என்பதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கை, வன்முறை அரசியல்… ஆகிய புறக்காரணங்கள் முற்றிலுமாக உண்மை என்றாலும், அவற்றை மட்டுமே சொல்லிக்கொண்டிராமல், மாற்றுச் சிந்தனைகளை எடுத்துச் செல்வதில் பலவீனம், போராட்டங்களில் நம்பிக்கையைப் பெறுவதில் போதாமை உள்ளிட்ட அகக்காரணங்களை ஆழ்ந்து ஆராய வேண்டிய தேவையை உணர்த்தியிருக்கிறார்கள். ஒத்த கருத்துள்ள தோழமைகள் கூட ஒதுங்கியிருந்ததற்கு நம் தரப்புக் காரணம் என்ன என்று தேட வைத்திருக்கிறார்கள். சரியான விடைகளோடும் புதிய அணுகுமுறைகளோடும் திரும்பி வா என்று ஆணையிட்டிருக்கிறார்கள்.

சொந்த ஆதாயங்களுக்காக அரசியலில் ஈடுபடுகிறவர்களல்ல கம்யூனிஸ்ட்டுகள். தேர்தல் செலவுகள் கூட மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்தே செய்யப்பட வேண்டும், சொந்தப் பணத்தை முதலீடாக்கக்கூடாது என்பதே இயக்கத்தின் கொள்கை. ஆகவே இந்தத் தேர்தல் தோல்வியால்—

கம்யூனிஸ்ட்டுகள் இழப்பதற்கு ஏதுமில்லை. அடைவதற்கோ பொன்னான படிப்பினை இருக்கிறது. சமுதாய மாற்றத்திற்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்டோரிடம் அந்தப் படிப்பினையைக் கற்கிற புரட்சிகர மனமும் இருக்கிறது.மக்களின் இப்போதைய தீர்ப்பால் கம்யூனிஸ்ட்டுகள் சோர்ந்து துவண்டுவிடவில்லை. கதை முடிந்தது என்று குதூகலித்துத் துள்ளாட்டம் போடுகிறவர்களைக் கண்டே கம்யூனிஸ்ட்டுகள் சிரிக்கிறார்கள்.

Kumaresan Asak

Related Posts