32°C
விளம்பரம்
Advertisement

பாரதிராஜாவின் அசிஸ்டெண்ட் இயக்கும் ” எடால்” திரைப்பட ஸ்டில்ஸ்

admin Published: January 22, 2016 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



டி எக்ஸ்ட்ரா வேகன்ஷா என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு வித்தியாசமாக “ எடால் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வெங்கட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யுவா நடிக்கிறார். மற்றும் சுந்தரமகாலிங்கம், சம்பத், சாந்தி, போன்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.


கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் – ஸ்ரீகர் என்ற புதியவர். ( இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் )இயக்குனரிடம் படம் பற்றி கேட்டோம்…”எலிப்பொறிக்கு எடால் என்று இன்னொரு பெயரும் உண்டு. வெங்கட்டும் – யுவாவும் காதலர்கள் இவர்களின் காதலுக்கு பல பேரிடமிருந்து பல விதங்களில் எதிர்ப்பு வருகிறது.எலியை பொறி வைத்து பிடிப்பது போன்று பலரை பொறி வைத்து பிடிக்கிறான். சாம, பேத, தான, தண்டம் என்கிற நான்கு யுக்திகளை வைத்து எதிரிகளை பிடிக்கிறான். அது எப்படி என்பதுதான் பரபரப்பான திரைக்கதையாக “ எடால் “ வந்திருக்கிறது. ஆழமான நட்பையும் மதி நுட்பமான அறிவையும் உள்ளடக்கிய கதையாக “ எடால் “ படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் வெளிவர உள்ளது” என்றார் இயக்குனர்.

உடனடி செய்திகள்