உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த 5 இந்தியர்கள்

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த 5 இந்தியர்கள்

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் இடம் பிடித்துள்ளனர்.அதே சமயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பட்டியலில் இடம்பிட்பிடிக்த்திருந்த சோனியா உள்ளிட்ட சிலரின் சுவடே காணாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்க்து.
2014
உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜெர்மனியை சேர்ந்த அரசியல்வாதியான ஏஞ்சலா மேர்கல் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.அதன்படி, பெப்சிகோ இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி 13வது இடத்தையும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக பணிபுரியும் அருந்ததி பட்டாச்சார்யா 36வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் சந்தா கோச்சார் 43வது இடத்தையும், அமெரிக்காவிலுள்ள சிஸ்கோவில் சிஸ்டம்சில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிபவரும் இந்தியாவில் பிறந்தவருமான பத்ம ஸ்ரீ வாரியர் 71வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மருத்துவ துறையில் சாதனை படைத்து வரும் பயோகான் நிறுவனத்தின் நிறுவனரான கிரண் மசூம்தார் ஷா 92வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Posts