இரவில் வீட்டுக்கு வெளியே வர பயப்படும் பெண்கள்!
டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உல்கம் முழுக்க அதிகரித்துள்ளது; அதே அளவிற்கு உல்கம் முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கூடியுள்ளன என்றும் தற்போதும் கூட உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இரவு நேரங்களில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர பயப்படுவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிலும் ஆண்களை விட மூன்று மடங்கு பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வர பயப்டுவதாகவும், பெண்களுக்கு எதிராக கையாளப்படும் வன்முறைகளே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்பெண்கள் மட்டுமின்றி 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதால் தனியாக வெளியே செல்ல பயப்படுவதாகவும் 33 சதவிகித பெண்கள் தனியாக பயணிக்கும் போது மிளகாய்த்தூள், கத்தி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பயணிப்பதாகவும் வெளியே புறப்படுவதற்கு முன்பு தாங்கள் செல்லும் வழியை பற்றி பெரும்பாலான பெண்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையே கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். முன்பின் தெரியாத சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது வழியை தெரிந்து கொள்ள இதே எண்ணிக்கையிலான பெண்கள் வழிப்போக்கர்களையே நம்பி இருப்பதும் இந்தஆய்வில் தெரிய வந்துள்ளது.


