இன்னும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை!
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாககம் வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம்
“நேற்று இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மேல் அடுக்கு சுழற்சி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி இலங்கை மீது நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிக பட்சமாக விருதுநகர் மாவட்டம் வந்திராய் இருப்பு மற்றும் பொள்ளாச்சியில் 10 செ.மீ மழையும், தங்கச்சி மடம் 9 செ.மீ, சிவகாசி, பாம்பன் தலா 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.மேலும்
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.”என்று அவர் கூறினார்.


