இந்திய ராணுவ முகாமில் சக வீரர் சுட்டதில் 5 வீரர்கள் உயிரிழப்பு!

இந்திய ராணுவ முகாமில் சக வீரர் சுட்டதில் 5 வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு- காஷ்மீர் மாவட்டம் கந்தர்பால் ராணுவ முகாமில் வீரர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதில் சக ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Indian-Army leg
கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில், இன்று காலை ராணுவ வீரர் ஒருவர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சக வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இதில், ஐந்து வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டதாகவும், மேலும் துப்பாக்கியால் சுட்ட வீரர் தம்மைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருவதாகவும், பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இப்படி சக வீரர்களை கொலை செய்வது ஏன்?என்று விசாரித்த போது,”இந்திய ராணுவப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் சிலர் சக வீரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது கடந்த 24 ஆண்டுகளில் பல முறை நடந்திருக்கிறது.அதிலும்
ராணுவ வீரர்கள் மன உளைச்சலுடன் பணியில் ஈடுபடுவது, குடும்பத்தாரை நீண்ட நாட்களாக பிரிந்திருப்பது, போதிய ஓய்வின்மை ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தமே வெறிச் செயல்களைத் தூண்டுகிறது.இத்தகைய நெருக்கடியை சமாளிக்க அலோசகர்கள் பல்வேறு வழி முறைகளை ராணுவத்திற்கு பரிந்துரைத்துள்ளனர். சரியான இடைவெளியில் ராணுவ வீரர்களுக்கு விடுமுறை அளிப்பது, ராணுவ வீரர்கள் கட்டுப்பாடு விதிமுறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது ஆகியன இவற்றில் அடங்கும்.” என்று தெரிய வருகிறது

Army jawan shoots five colleagues dead, then kills himself at J&K camp
**************************************************************************************
An army jawan of the Rashtriya Rifles shot dead five of his colleagues at a camp in Manasbal area of Ganderbal district in Jammu and Kashmir late last night and later killed himself.

Related Posts