32°C
விளம்பரம்

“இந்தியாவோட பொருளாதார நெலமை ஆஹா .. ஓஹோ ..பேஷ்.பேஷ்!” – ஐ.நா.வின் அறிக்கை

admin Published: January 22, 2016 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



இந்திய பொருளாதாரம் அதிக வளர்ச்சியை சந்திக்கும் நம்பிக்கை உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று குறிப்பிட்டார். இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்துவதற்கு உறுதுணையாக தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.வெளிநாட்டு முதலீட்டாளர் களை கட்டமைப்பு துறையில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்த அருண் ஜேட்லி, சீர்திருத்த நடவடிக் கைகளில் செயல்பாட்டுக்கு வராத ஜிஎஸ்டி சட்டம் விரைவில் அமலாகும் என நம்பிக்கையில் உள்ளேன் என்றும் குறிப்பிட்டார்.சீர்திருத்த நடவடிக்கைகளில் நீண்டகாலமாக இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டதில்லை. இதற்கு இங்குள்ள ஜனநாயக அமைப்பும் ஒரு காரணம் என்றார். டாவோஸில் நடந்த உலக பொருளாதார பேரவையின் ஆண்டு கூட்டத்தின் ஒரு பகுதியாக சிஐஐ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜேட்லி இவ்வாறு கூறினார்.
eco jan 22
தற்போது இந்தியா தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. உலக அளவில் முதலீட்டாளர்களுக்கு, இந்தியாவினுடைய உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பங்கு கொள்ளுமாறு அழைத்துள்ளோம். நடப்பு கணக்கு வீதம் 7 – 7.5 சதவீதமாக இருந்து வருகிறது. இது எங்களது வளர்ச்சியல்ல, நான் தொடர்ச்சியாக சொல்லி வருவது போல நிதிப் பற்றாக்குறையை 1 – 1.5 சதவீதத்துக்குள் கொண்டு வருவோம். இதுதான் எங்களது இலக்கு.இந்த இலக்கை நாங்கள் எட்டுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி குறித்து பேசிய ஜேட்லி அனைத்து மாநிலங்களும், அனைத்து அரசியல் கட்சியை சேர்தவர் களும் ஜிஎஸ்டி குழுவில் இடம் பெற்றுள்ளனர். இது சாதகமான விஷயம் என்று குறிப்பிட்டார். விரை வில் மாநிலங்களவையில் சாதமான சூழல் உருவாகும் நிலையில், ஜிஎஸ்டி அமலுக்கு கொண்டு வரப் படும் என்று கூறினார் சீரமைப்பு நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்பு மாநிலங்களுக்கும் உள்ளது. மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே 2016-ம் ஆண்டில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டு உள்ளது. 2016-ம் ஆண்டில் 7.3 சதவிதத்துடன் இந்தியா உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும். அடுத்த வருடம் 7.5 சதவிதமாக உயரும் என்றும் ஐ.நா.வின் உலக பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“தெற்கு ஆசியாவின் ஜி.டி.பி.யில் 70 சதவிதத்திற்கும் மேலாக இந்தியா பொருளாதாரத்தின் பங்கு உள்ளது, 2016-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 7.3 சதவிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதுவே 2017-ம் ஆண்டில் 7.5 சதவிதமாக இருக்கும், 2015 ம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 7.2 சதவிதம் என்பதில் இருந்து சற்று உயர்ந்து உள்ளது.” 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் தெற்கு ஆசியா உலகில் வேகமாக வளரும் பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“இப்பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் மத்தியில், இந்தியாவில் பெரிய பொருளாதார சூழ்நிலையா னது, ஆயில் விலை குறைவு மற்றும் உலோகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் விலை குறைவு உதவியுடன் மேம்பட்டு உள்ளது. பரந்த அளவில் சீர்திருத்த திட்டங்களை அமல்படுத்துவதில் இந்திய அரசு கடிமானநிலையை எதிர்க்கொண்டு வந்தாலும் நுகர்வோர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையானது அதிகரித்து உள்ளது.தெற்கு ஆசியாவில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டி உள்ள ஐ.நா.வின் அறிக்கை, இந்தியா, வங்காளதேசம், ஈரான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் நிதிப் பற்றாக்குறையை குறைத்து உள்ளன. இருப்பினும் அங்கு பலவீனங்களும் உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளது.

உடனடி செய்திகள்