இந்தியாவின் பணவீக்கம்! – உலக வங்கி எச்சரிக்கை

இந்தியாவின் பணவீக்கம்! –  உலக வங்கி எச்சரிக்கை

இந்தியாவின் பணவீக்கம் மிகவும் அபாயமான நிலையில் இருப்பதாகவும், பெரும் சீர்திருத்த நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நரேந்திரமோடி அரசு உள்ளதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
INDIAN-ECONOMY-BIG
இந்தியாவின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் ஏப்ரலில் 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும். உணவுப் பொருள் மற்றும் எரிபொருள்களின் விலை கணிசமாக உயர்ந்ததே இதற்குக் காரணமாகும்.

மொத்த விற்பனை விலை அடிப்படையிலான குறியீட்டெண் மார்ச் மாதத்தில் 5.7 சதவீதமாக இருந்தது. 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது 4.77 சதவீதமாக இருந்தது என்று மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் . தற்போதுள்ள பணவீக்கம் என்பது நாட்டிற்கு நீண்ட காலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும் எனவும் இந்த பணவீக்கம் அபாயமான நிலையில் உள்ளதால், பெரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நரேந்திரமோடி அரசு உள்ளது என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

Related Posts