ஆம் ஆத்மி டெல்லியில் அடுத்த வாரம் ஆட்சி அமைக்கும்!

ஆம் ஆத்மி டெல்லியில் அடுத்த வாரம் ஆட்சி அமைக்கும்!

“ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என 80 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களின் அபரிமிதமான ஆதரவு மற்றும் விருப்பத்துக்கு இணங்க டெல்லியில்ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த வார இறுதியில் அனைத்து வார்டுகளிலும் கருத்து கேட்டு முடிக்கப்படும் ” என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதையடுத்து டெல்லியில் வரும் வாரம் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது.
Aam Aadmi Party leader Arvind Kejriwal during an election campaign near Jama Masjid in Delhi on Nov.10, 2013. (Photo: IANS)
டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. முதலில் இதனை ஏற்க மறுத்த ஆம் ஆத்மி கட்சி, பின்னர் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த கூடுதல் அவகாசம் கேட்டது. அத்துடன், கூட்டணி ஆட்சி குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இதன் முடிவை ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு அறிவிக்க உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு மத்திய அரசு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என்று உள்துறை மந்திரி ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது,”ஆட்சி அமைப்பது குறித்து தில்லியின் 270 வார்டுகளில் உள்ள மக்களிடம் கருத்தறிந்து இறுதி முடிவை அறிவிப்போம். நாங்கள் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கொடுத்த நிபந்தனையற்ற ஆதரவும், அதையடுத்து, ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்களிடம் இருந்து வரும் நெருக்குதலும் எங்களது முடிவை மறுப ரிசீலனை செய்யவைத்துள்ளது. ஒரு வேளை நாங்கள் ஆட்சி அமைத்தாலும், அடுத்துவரும் மக்களவைத் தேர்தலில் எங்கள் செயல்பாடுகளை அது பாதிக்காது என நினைக்கிறேன் “என்று கேஜரிவால் தெரிவித்தார்.

மேலும் “ஆட்சி அமைப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், மக்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 10 லட்சம் பேரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்’ என்றும ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளதையடுத்து அது அடுத்த வரம் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது!.