’அந்த’வாழ்க்கையில் தன்னிறைவு: இந்தியர்களுக்கு உலகளவில் ஏழாவது இடம்தான்!

’அந்த’வாழ்க்கையில் தன்னிறைவு: இந்தியர்களுக்கு உலகளவில் ஏழாவது இடம்தான்!

தாம்பத்ய உறவின் போது கணவன், மனைவி இருவரின் உடலும் உள்ளமும் ஒரே லயத்தில் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் அள வில்லாத இன்பத்தை இருவருமே அடையமுடியும். ஆனால் தாம்பத் ய உறவின் போது பெண்கள் என்ன நினைப்பார்கள்? அவர்களின் மன தில் என்ன மாதிரியான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்
sex may 3
* கணவனுடன் காதலில் திளைத்திருக்கும் போதுகூட நாளைக்கு என்ன சமைக்கலாம் என்பது பற்றி பல பெண்கள் நினைத்துக்கொண்டிருப்பார்களாம்.

* அய்யயோ. நான் எப்ப தூங்குறது? காலையில சீக்கிரம் எழுந்திருக்கணுமே என்பது பெரும்பாலான பெண்களின் கவலையாக இருக்கிறது.

*இந்த நேரத்தில குழந்தை கண் முழிச்சிட்டா என்ன பண்றது என்பது 20 சதவிகித பெண்களின் கவலையாம்.

இந்நிலையில் உலகம் முழுவதும் வாழும் மக்கள் தாம்பத்ய இன்பத்தில் எந்த அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளனர்? என்பதை கண்டறிய பிரபல கருத்தடை சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான ‘டியூரெக்ஸ்’, 26 நாடுகளை சேர்ந்த 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 26 ஆயிரம் பேரிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் 44 சதவீதம் மக்கள் மட்டுமே தங்களது தாம்பத்ய வாழ்க்கை திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படி, சாத்தியமான வகையில் கருத்து கூறியவர்களில் சுவிட்ஸர்லாந்து நாட்டினர் முதல் இடத்திலும், அதற்கடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், பிரேசில் ஆகிய நாட்டினரும் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்தியர்கள் ஏழாவது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த கருத்து கணிப்பை நடத்திய நிறுவனத்தின் கூற்றின்படி, ஓரளவுக்கு வயதான பின்னர் தம்பதியருக்கு தாம்பத்ய உறவில் நாட்டமின்மை உருவாக தொடங்கி விடுகின்றது. இதற்கு மாறுபட்ட வகையில் உடல் அளவிலும், மனதளவிலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தாம்பத்யத்தை ஒதுக்குவது இல்லை. அந்த வகையில் அவர்கள் எப்போதுமே மன ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் தாம்பத்யத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக உள்ளனர் என தெரியவருகின்றது.

Related Posts