அந்தமானில் நடமாடும் விடுதலைப்புலிகளை சமாளிக்க மேலும் சில தீவுகளைத் திறக்க அரசு முடிவு!
அந்தமான், நிக்கோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 556 ஆகும். ஆனால், இதில் 37 தீவுகள் மட்டுமே இதுவரை குடியேற்றத்திற்கு பயன்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின், விடுதலைப் புலிகள் அமைப்பில் எஞ்சியுள்ளவர்கள், அந்தமான் தீவுகளில், பாதுகாப்பாக மறைந்து வாழ முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதே சமயம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த தீவுகளுக்கு சென்ற வருடம் சுமார் 2.5 லட்சம் பயணிகள் வருகை தந்துள்ளனர். எனவே, சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரித்து அரசின் வருவாயைப் பெருக்கும்விதமாக மேலும் 3-4 தீவுகளை மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்க அந்தமான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அந்தத் தீவுகளில் உட்கட்டமைப்பை உருவாக்குவதோடு உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க அரசு எண்ணுகின்றது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் அண்மையில் சமர்பித்த அறிக்கையில்,” இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போருக்கு பின், விடுதலைப் புலிகள் அமைப்பில், எஞ்சியுள்ளவர்கள், மறைந்திருந்து, பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுந்த இடம் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக பதுங்கி வாழ்வதற்கு அந்தமானில் உள்ள மக்கள் வசிக்காத தீவுக் கூட்டங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன. இதனாலேயே விடுலைப் புலிகள் அமைப்பில் உள்ளவர்கள், இந்த தீவுகளுக்குள் ஊடுருவக் கூடும் என அந்தமான் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது என்றும் இப்படி புலம்பெயர்ந்த தமிழர்கள், தற்போது அந்தமானில் அதிகமாக வசிக்கின்றனர். குறிப்பாக 1960 மற்றும் 1907களில் இங்கு ஏராளமான தமிழர்கள் குடியேறினர். நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களைப் போல் இவர்களும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். “இவர்களின் உதவியுடன் விடுதலைப் புலிகள் அந்தமானுக்குள் எளிதாக ஊடுருவமுடியும்’ எனவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையைச் சேர்ந்தவர்களை தவிர மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் பலர் அடிக்கடி அந்தமானுக்குள் ஊடுருவுகின்றனர். குறிப்பாக இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியும் ஆள் நடமாட்டம் இல்லாத சூழ்நிலையும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் பதுங்கி வாழ்வதற்கும் போர் பயிற்சி பெறுவதற்கும் மிகவும் உதவியாக உள்ளது.”என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இதையடுத்தே இப்போது வளர்ச்சித் திட்டத்திற்காக சில தீவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும்விதமாக புதிய திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன. புவியியல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளினால் இந்தப் பகுதிகளில் தொழில்துறை வளர்ச்சிகளை மேற்கொள்ளமுடியாது. வேலையின்மையும், வாய்ப்புகள் குறைவும் எங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளன. இங்கு அரசாங்கமே தற்போது மிகப் பெரிய வேலைவாய்ப்பு நிறுவனமாக உள்ளது. ஆனால் அது மட்டும் போதாது. சுற்றுலாத்துறை வளர்ச்சியடைய இன்னும் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இந்தத் தீவுகளின் லெப்டினன்ட் கவர்னரான(ஓய்வு) ஏ.கே.சிங் தெரிவித்தார்.
ஸ்கூபா டைவிங், ஸ்னார்கெல்லிங் போன்ற சாதனை விளையாட்டுகள் அந்தமானில் பிரபலமாக உள்ளன. இதுபோன்று மேலும் பல புதிய பிரிவுகள் திறக்கப்பட்டால் சர்வதேசப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேரத்திலும் விமானங்கள் தரையிறங்கும் வசதிகள் அளிக்கப்படவேண்டும். இதற்கான செயல்முறைத் திட்டங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஆறு மாதத்திற்குள் இரவு நேர விமானங்களும் தரையிறங்கும் வண்ணம் இங்குள்ள வீர் சவர்க்கார் விமான நிலையம் மேம்படுத்தப்படும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற படகு விபத்திற்கு பின் அனைத்துப் படகு போக்குவரத்திற்கும் பாதுகாப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய விபத்துகள் வெளிநாட்டு பயணிகளின் வருகையைக் குறைக்கும் என்பதால் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் அரசு கவனம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் அந்தமான் ஒரு சிறந்த சுற்றுலாத்தலம் என்பதை உறுதிப்படுத்தும் திட்டமிட்ட முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது என்று சிங் குறிப்பிட்டுள்ளார்.
Andamans to throw open 3-4 more islands for tourists
***********************************************************************
The Andaman and Nicobar archipelago comprises 556 islands of which only 37 are inhabited. Before long, this number may rise to 40 or even more. The Andaman and Nicobar administration is planning to throw open 3-4 islands soon to attract more tourists. This will involve creation of infrastructure on these islands and will generate employment.


