அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கப் போறீங்களா? அப்ப இதைப் படிங்க!
தங்கம் 916 என்பது என்ன? வர்த்தக ரீதியாக எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
ஒரு சவரன் / பவுன் (8 கிராம்) தங்க நகை செய்ய, நகை செய்பவர் 8 x 916 = 7328 மில்லி கிராம் தங்கம் எடுத்துக் கொள்கிறார். 8000 – 7328 = 672 மில்லி கிராம் மீதமுள்ள 672 மிகி செம்பு கலந்து அணிகலனாக செய்யப்படுகிறது.இவ்வாறு கலந்து செய்யும் போது செம்பும் சில நாளில் மஞ்சளாக மாறிவிடுகிறது. செம்பும் வெள்ளியும் சேர்த்து தங்கத்தோடு அணிகலன் செய்தோமானால் பல ஆண்டுகள் நிறம் மாறாமல் அப்படியே நிலைக்கும்.

தங்கத்தில் குணத்தை அளைவயும் அறிந்திட பல முறைகள் உள்ளன. X ரே கதிர்கள் மூலம் இதை ஆராய்வது ஒரு முறை என்றாலும் இந்த முறையில் முழுமையாக ஓர் அணிகலனில் உள்ள தங்க சதவிகிதத்தை அளவிட முடியாது.
இந்தியாவில் குறிப்பிட்ட சதவிகிதம் சுத்த தங்கம் உள்ள நகை என எதையும் நாம் வாங்க முடியாது. வெள்ளை உலாகங்களான ஆஸ்மியம், பெல்லாடியம், இர்டியம், ருதீனியம் ஆகிய உலாகங்கள் தங்கத்துடன் சேர்க்கப்படுகின்றன. விதிமுறைப்படி தங்கத்தில் செம்பு, வெள்ளி ஆகிய உலோகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும். ஆனால் வெள்ளை உலோகங்களான ஆஸ்மியம், பெல்லாடியம், இரிடியம், ருதீனியம் ஆகிய உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த உலோகங்கள் வெவ்வேறு உருகும் கொதி நிலையைக் கொண்டுள்ளதால் இடித்து பொடி செய்து உருகிய நிலையில் இவற்றை தங்கத்துடன் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட தங்கத்தைக் கண்டறிவது மிகவும் கடினம்.
ஹால்மார்க் முத்திரை
இந்தியாவைப் பொறுத்தவைர வருடத்திற்கு 880 டன் தங்கம் வியாபாரமாகி வருகிறது. பொதுவாக 2% கலப்படம் என்று வைத்துக் கொண்டாலும் 88 டன்னுக்கு 17.6 டன் தங்கம் சுத்தமான தங்கெமன்று அவை பிஐஎஸ் நிர்ணயித்த ஹால்மார்க் தங்கத்தின்படி இல்லை எனலாம்.
ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளில் வளர்ச்சி அடையாத நகரங்களிலும் ஊர்களிலும் விற்றாலும் அவை வெறும் 60%தான் தூய்மையான தங்கமாக உள்ளது. இவை விற்கப்படும் இடங்களிலும் எந்தெவாரு சோதனையோ முறைப்படுத்தும் வரைமுறைகளோ
இதற்கு இல்லை. இது போன்ற 60% தங்கம் சுமார் 480 டன்கள் அளவிற்கு நுகர்வோர் பயன்படுத்தி வருகிறர்கள். இந்த 60% தங்கத்தின் மதிப்பு ரூ.33,120 கோடி. அதாவது இது நுகர்வோர் ஒவ்வொரு ஆண்டில் ஏமாற்றப்படும் தொகையின் மதிப்பாகும்.
மேலும் தங்கத்தை எடைபோடும் விதிமுறைகளை எடை அளவு துறை கண்காணித்து வருகிறது. எடையில் கூட திருத்தம் என்பது இத்துறையால் அனுமதிக்கப்படுகிறது. 2-6 டன் எடை திருத்தமாக 880 டன் தங்கத்திற்கு இத்துறையால் அனுமதிக்கப்படுகிறது. இது நுகர்வோருக்கு அதிக இழப்பு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
பெரும்பாலான நேரங்களில் எடை என்பது மொத்தமாக முழுமையாக்கப்படுவதால் நுகர்வோர் குழப்பத்தில் ஆழ்ந்து அவர்கைள வற்புறுத்தி ஏற்றுக் கொள்ள செய்யப்படுகின்றனர். இவ்வாறு எடையிலும் நுகர்வோர் ஏமாற்றப்படுகின்றனர். நமக்கு நுகர்வோரை காப்பாற்ற நல்ல வழிமுறை ஏதுமில்லை.
1. தங்க ஆபரணம் விற்கும் போது துல்லியமான எடையையும், தரத்தையும் பின்பற்றாவிட்டாலோ, எந்த வியாபாரியாவது செம்பு, வெள்ளி தவிர வேறு எந்த வெள்ளை உலோகமும் கலந்து தங்கம் தயாரித்து விற்றாலோ அந்த வியாபாரியின் உரிமத்தை ரத்து செய்து அவருக்கு 10 ஆண்டுகள் வரை விற்பனையை தடை செய்ய வேண்டும்.
2. இத்தண்டைனையை ஒரு அறிவிப்பாக கடையின் முக்கியமான இடத்தில் ஒட்டி வைக்கலாம். இது தொடர்பான விவரம் எல்லா ஊடகங்களுக்கும் வழங்கலாம். இதனால் எந்தக் கடைக்காரருக்கும் நுகர்வோரை ஏமாற்றும் துணிச்சல் வராது. அதே நேரம் அரசின் வழிமுறைகளை மற்றவர்களும் பின்பற்றலாம்.
– “கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா!!!’ -தலைவர் நிர்மலா தேசிகன்..


