அசோக சக்கரம் + காந்தி படம் பொறித்த தங்க நாணயங்கள் சென்னையில் விற்பனை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவை குறைக்கும் விதமாக, மக்கள் பயன் படுத்தாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்க நகைகளை வங்கியில் டெபாசிட் செய்யும் ‘தங்கம் முதலீட்டு திட்டத்தை’ கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அப்போது, தங்க நாணயங்களையும் வெளியிட்டார்.

இந்த நாணயங்கள் 24 காரட் துாய்மையான தங்கமாகவும் ‘ஹால் மார்க்’முத்திரையுடன் கூடியதா கவும் இருக்கும். இந்த நாணயத்துக்கு முதல் முறையாக உள்நாட்டிலேயே அச்சிடப்பட்ட தேசிய தங்க நாணயம் என்ற பெருமையும் உண்டு பொதுத்துறை நிறுவனமான மத்திய உலோக மற்றும் கனிமவள கழகமான எம்.எம்.டி., மூலமாக இந்த நாணயங்கள் விற்பனை செய்யப்படுகிறது
இந்த நாணயங்களில் ஒருபுறம் மகாத்மா காந்தி படமும் மறுபுறம் அசோக சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 15,000… 5 கிராம் தங்க நாணயங்களும் … 20,000… 10 கிராம் தங்க நாணயங்களும் , 3,750 20 தங்க கட்டிகளும் விற்பனைக்கு வெளியிடப்படுகிறது. இதை பொது மக்கள் வாங்கி தங்கத்தின் மதிப்பை பொறுத்து எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். விற்பனை செய்யப்பட்டாலும் இவை மத்திய அரசின் கருவூல கணக்கில் தான் இருக்கும் .
இந்த தங்க நாணயங்கள் விற்பனை நாடு முழுவதும் தொடங்கியதையடுத்து சென்னை எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கனிமம் மற்றும் உலோகம் விற்பனை கழகம் (எம்.எம்.டி.சி.) அலுவலகத்திலும் இந்த தங்க நாணயம் விற்பனை தொடங்கியது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் மஜில்லா லூயிஸ் கூறும்போது, ‘3 வகையான தங்க நாணயங்கள் விற்பனை தொடங்கியுள்ளது. பொதுமக்கள் இந்த தரமான, 24 காரட் தங்க நாணயங்களை வாங்கி சேமிக்கலாம். இதற்காக, 044-25341599 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்க நாணயம் குறித்த விவரங்களை பொதுமக்கள் கேட்டு தெரிந்துகொள்ளலாம்’ என்றார்.


