மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது!
இன்றளவும் நம்மில் பலரும் பிறப்பை பற்றி யோசித்ததை அல்லது பேசுவதை விட இறப்பை பற்றி யோசிக்காமல் அல்லது பேசாமல் இருக்க வாய்ப்பு வாய்ப்பு மிகவும் குறைச்சல் .இப்படி இந்த இறப்பு என்பதை யோசிக்க ஆரம்பித்தால், சாதாரணமான காரணங்கள்தான் புலப்படுகிறது . ஆனால் இதில் எதை எடுத்து கொள்வது.
1. மூச்சு நிற்பதுதான் இறப்பா ? இல்லை
2. இதயம் துடிப்பதுதான் நிற்பது இறப்பா ? அல்லது
3. மூளை சிந்திப்பதை நிறுத்தும் போதுதான் இறப்பு நிகழ்கிறதா ? இல்லை
4. இரத்த ஓட்டம் நிற்கும் போது நடப்பதுதான் இறப்பா ? அல்லது இதையெல்லாம் தாண்டி வேறு காரணங்கள் தான் இருக்கின்றனவா?

ஆனாலும் நினைவுகள் இருக்கும் வரை தான் மற்றவைகள் இருப்பதா? இல்லையா? என்று தெரியும். நம்மில் ஒவ்வொருவரின் பிறப்பை பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை இறப்பை பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. இதற்கிடையில் இடைப்பட்ட காலத்தையும் அனுபவிக்க முடிய வில்லை. இறப்பு தான் பிறப்பின் ஆரம்பம் என்றால் பிறப்பின் முடிவு இறப்பின் ஆரம்பம். ஆனாலும் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா காலங் காலமாக, நாகரி கமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக் கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.
அதாவது நமக்கு இரண்டு உடல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த இந்த பூத உடல் உன்று. மற்றொன்று கண்ணுக்குப் புலப்படாத சூட்சம உடல் ஆகும். நாம் இறந்த பின் நாம் வேறு ஏதோ உலகுக்குப் பயணிக்கிறோம். நமது நன்மை, தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கமோ நரகமோ செல்கிறோம் எனவே மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பதுதானே நம்பிக்கை. ஆனால் மரணம்தான் இறுதி யானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பது கிடையாது என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் போது,”மூளை உயிருடன் இருக்கும் வரை தான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எது வுமே கிடையாது. நான் கடந்த 49 வருடமாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. ஆனால் மரணிக்க நான் அவசரப் படவில்லை.நான் நிறைய சாதிக்க ஆசைப் படுகிறேன்.பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை.அதையெல்லாம் செய்ய வேண்டும். மூளை யும ஒரு கம்ப்யூட்டர் போலத்தான்.எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செய லிழந்தால் அது செயலிழந்து போகுமோ அது போலத்தான் மூளையும்.மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும்.அதன் பிறகு எதுவுமே இல்லை.மரணம்தான் இறுதி யானது. அதன்பிறகு சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக் கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் அவை” என கூறி உள்ளார்.


